திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கெத்து காட்ட நினைத்து 40 பேரிடம் செம்ம அடிவாங்கிய விஜய்.. அவரே கூறிய உண்மை சம்பவம்

நடிகர் விஜய் என்னதான் இயக்குனரின் மகனாக அறிமுகமானாலும் அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலூன்ற பல தடைகள் இருந்தது. இன்று தீ தளபதியாக உருவாகியுள்ள நடிகர் விஜய் மேடைகளில் குட்டி ஸ்டோரி மட்டுமே கூறி விட்டு சென்று விடுகிறார். ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த விஜய் தன் மனதில் பட்ட பல விஷயங்களை மறைக்காமல் பேசுபவர்.

அப்படி பல கல்லூரி மாணவிகள் இணைந்து விஜயுடன் சில பேட்டிகளை எடுத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்ட நிலையில் ஒரு மாணவி, நீங்கள் செய்த மிகவும் குறும்பான விஷயம் எது என்று சொல்லுங்கள் என விஜயிடம் கேட்டார். அதற்கு சற்று கூட யோசிக்காத விஜய் தான் கல்லூரி படிக்கும் போது தனக்கு நிகழ்ந்த ஒரு விஷயத்தைக் கூறினார்.

Also Read : 3 அரசியல் கட்சிகளால் அல்லோலபட்ட விஜய்.. ஒவ்வொரு பிரச்சனையும் சமாளிக்க படாத பாடுபட்ட தளபதி

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனது சக நண்பர்களுடன் ரயிலில் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்தாராம் விஜய். அப்போது ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என எல்லோரும் ஜாலியாக சென்றோம். அப்போது திடீரென பக்கத்திலிருந்த 2 ஆண் பயணிகள், தங்களுடன் வந்த பெண் தோழிகளை கலாய்த்துள்ளனர். உடனே விஜய்யும் அவரது பத்து நண்பர்களும் இணைந்து அந்த இரண்டு ஆண்களையும் அடித்து துவம்சம் செய்தார்கள்.

ஒரு ஹீரோயிஸம் காண்பித்தது போல கெத்தாக இருந்த நிலையில், அந்த கெத்தை உடனே சுக்குநூறாக உடைக்கும் வகையில் அடுத்த ரயில் நிலையத்திலேயே நாங்கள் அடித்த இரண்டு ஆண்களின் நண்பர்களான கிட்டத்தட்ட 40 பேர் ரயிலில் ஏறி, எங்கள் 10 பேரையும் அடித்து துவம்சம் செய்தார்கள் என விஜய் கலகலப்பாக பேசினார்.

Also Read : சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

தனது வாலிப காலத்தில் நடிகர் விஜய் பல குறும்பான விஷயங்களை செய்து கொண்டு மாட்டிக் கொண்டுள்ளார். இது சாதாரண இளைஞர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறியது தான் பலருக்கும் ஆச்சரியம்.

திரைப்படங்களில் வில்லன்களை அடிப்பது, துப்பாக்கியை வைத்து சுடுவது என பல அதிரடி காட்சிகளில் நடித்த விஜய், தான் அடி வாங்கியதை ஓப்பனாக ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டது தான் விஜயின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் வரும் பொங்கலன்று வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜயின் இந்த குறும்புத்தனமான பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

Also Read : ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

Trending News