வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டு வாங்கிய விஜய்.. தளபதி பிறந்தநாள் சம்பவம் ரெடி

Vijay: வெங்கட் பிரபு மாநாட்டுக்கு பின் எடுத்த கஸ்டடி, விக் டிம் (வெப் தொடர்) மன்மத லீலை என எந்த படமும் கை கொடுக்கவில்லை. வெங்கட் பிரபுவிற்கு கோவா சரோஜா, சென்னை 28 போன்ற ஜாலியான படங்கள் மட்டும் தான் கைகொடுக்கும்,அவரிடம் சரக்கு தீர்ந்தது எனபல பேச்சுக்கள் வந்தது.

வெங்கட் பிரபு பலமுறை அஜித்தை நேரில் சந்தித்தும், அவருக்கு கதைகள் ரெடி பண்ணியும், மங்காத்தா படத்திற்கு பிறகு இன்று வரை அஜித் செவிசாய்க்காமல் இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் வெங்கட்பிரபு வெவ்வேறு படங்களை சென்று விட்டார். அஜித் இடமிருந்து எந்த ஒரு பாசிட்டிவான ரெஸ்பான்ஸ்சும் வரவில்லை.

இந்நிலையில் தான் எதிர்பாராத விதமாக விஜய்யிடமிருந்து அழைப்பு வந்தது. இவர்கள் கூட்டணியில் கோட் படம் 99 சதவீதம் முடிந்து விட்டது. விஜய் ஒரு மாதத்திற்கு முன்பே அவருடைய போர்ஷனை இந்த படத்தில் முடித்துவிட்டார். இப்பொழுது போஸ் ப்ரொடக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நிறைய வி எஃப் எக்ஸ் காட்சிகள் இருக்கிறது. அதற்காகத்தான் படத்தின் வேலைகள் இன்னும் இழுத்துக் கொண்டே இருக்கிறது. வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ போன்ற நவீன டெக்னாலஜியால் இந்த படத்தில் இறந்து போன விஜயகாந்தை மீண்டும் திரையில் காட்டுகிறார்கள்.

தளபதி பிறந்தநாள் சம்பவம் ரெடி

ஏற்கனவே இந்த படத்தில் “விசில் போடு” பாடலை விஜய் தான் பாடியுள்ளார். அது மட்டுமின்றி கோட் படத்தில் இன்னொரு பாடலையும் விஜய் தான் பாடி இருக்கிறார் . அந்தப் பாட்டின் வரிகள் மிகவும் பிடித்துப் போகவே வெங்கட் பிரபுவிடம் சண்டை போட்டு பாடியுள்ளார் தளபதி. வெங்கட் பிரபுவிற்கு இதில் விருப்பம் இல்லையாம். இந்தப் பாட்டு ஜூன் 22 விஜய் பிறந்தநாள் அன்று வெளிவரப் போகிறதாம்.

Trending News