திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தில் ராஜு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் பல கோடிக்கு வியாபாரம் ஆகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பல மாதங்களாகவே பட குழுவினர் விஜய்யின் வரவுக்காக காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி வாரிசு திரைப்படம் முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே போனது. தற்போது படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் விஜய் வாரிசு டீமுக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டிருக்கிறார்.

Also read: துணிவு படத்துக்கு பயந்து வம்சி செய்த காரியம்.. எல்லாம் வீண் செலவு என்று புலமும் தயாரிப்பாளர்

அந்த வகையில் தளபதி 67 தற்போது தடபுடலாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதற்காக தயாராகியுள்ள விஜய் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். அதன்படி வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்த படத்தின் பூஜை போடப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை படத்தின் ப்ரோமோ சூட்டிங் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் பலரையும் கவர்ந்த நிலையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு டீசர் அதைவிட மாசாக உருவாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் 15 நாட்களும் பிறகு காஷ்மீரிலும் நடைபெற இருக்கிறது.

Also read: விஜய்யை அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்ளும் நடிகை.. தளபதி-67 வாய்ப்புக்காக செய்த வேலை

மேலும் இந்த படத்தின் கதை இதுதான் என்று ஒரு தகவல் உலா வரும் நிலையில் இந்த படம் விஜய் கேரியரிலேயே முக்கிய படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பே மாஸ்டர் மூலம் அனைவரையும் மிரட்டிய இந்தக் கூட்டணி மீண்டும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. பல மாதங்களாகவே இந்த படத்திலிருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இனி வாரிசு திரைப்படத்தை காட்டிலும் இந்த படம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

Trending News