புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நவீனை கூப்பிட்டு ஓவராக மிரட்டும் விஜய்.. காவேரி இருக்கும் திமிரில் பிடிவாதமாக டார்ச்சர் பண்ணும் யமுனா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒவ்வொருவரும் சுயநலத்திற்காக நவீனை பலியாடாக சிக்க வைப்பதற்கு துணிந்து விட்டார்கள். காவிரியை பொருத்தவரை தன்னுடைய தங்கச்சி நினைத்தபடி காதலில் ஜெயிக்க வேண்டும். அதற்கு எப்படியாவது நவீனை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நவீன் இடம் கெஞ்சி தொடர்ந்து டார்ச்சர் பண்ணி வருகிறார்.

அதிலும் ஒரு கட்டத்தில் நவீன் எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் யமுனாவை மணப்பெண் மாதிரி அலங்கரித்து கோவிலுக்கு கூட்டிட்டு வந்து தொடர்ந்து நவீனுக்கு போன் பண்ணி மிகப்பெரிய இம்சை கொடுத்து விட்டார். ஆனால் இதற்கெல்லாம் மனமிரங்காத நவீன், எதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கோவிலில் ஏமாந்து போய் நின்ன யமுனாவை ஆறுதல் படுத்தும் விதமாக விஜய், உன் கூட நவீனை சேர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பு.

நவீன் வாழ்க்கையை சூனியம் ஆக்கிய காவேரி நவீன்

எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு நாளைக்கு இதே நேரத்தில் உனக்கும் நவீனுக்கும் கல்யாணத்தை நான் பண்ணி வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். அதன்படி யமுனா எப்படி நம்மளுக்கு கல்யாணம் நடந்து விடும் என்ற திமிரில் நவீனை நினைத்து பிடிவாதமாக இருக்கிறார். அடுத்ததாக விஜய், நவீனுக்கு போன் பண்ணி உங்களிடம் கொஞ்சம் பேசணும் வாங்க என்று கூப்பிடுகிறார்.

நவீனம் காவிரி விஷயமாக பேச தான் கூப்பிடுகிறார். அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் காண்ட்ராக்ட் முடிந்ததும் காவிரியுடன் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் விஜய்யை பார்ப்பதற்கு நவீன் போகிறார். போனதும் நவீனிடம் யமுனாவை கல்யாணம் பண்ண சொல்லி விஜய் வற்புறுத்துகிறார். அதற்கு நவீன் என் மனதில் காவிரி தான் இருக்கிறார். உங்க ஒப்பந்தத்தின்படி கல்யாணம் முடிந்த பிறகு காவிரி நிலைமை என்ன ஆகும்.

அப்பொழுது அவளுக்கு சப்போர்ட்டாக நான் நின்னு காவிரியை கல்யாணம் பண்ணுவேன் என்று நவீன் கூறுகிறார். இதைக் கேட்டு கோபத்தில் கொந்தளித்த விஜய், மறுபடியும் மறுபடியும் ஒப்பந்த கல்யாணம் என்று பேசாத. என் மனதிற்குள் காவிரி நுழைந்து விட்டால். நான் காவிரியை மனதார காதலிக்க ஆரம்பித்து பொண்டாட்டியாக நினைத்து விட்டேன்.

அதே மாதிரி தான் காவிரி மனதிற்குள்ளும் நான் தான் இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் வைத்தே உனக்கு தெரிந்திருக்கும், காவிரி மனதில் நீ இல்லை நான்தான் இருக்கிறேன் என்று விஜய் சில உண்மைகளை கூறுகிறார். இதனால் நவீன், அப்படி என்றால் காவேரி மனதிற்குள் நாம் இல்லை விஜய் தான் இருக்கிறார் என்று புரிந்து கொண்டார். அதன்படி நவீன், காவிரிக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கு என்று தெரிந்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன்.

என்னை பொறுத்தவரை காவிரி எங்க இருந்தாலும் சந்தோசமாக இருக்க வேண்டும். அதனால் நான் காவிரியை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இப்படி சொல்லியும் நவீனை விடாமல் மச்சினிச்சிக்காக விஜய், யமுனா கழுத்தில் தாலி கட்ட சொல்லி மிரட்டுகிறார். நீங்கள் காவிரி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்வதில் உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் யமுனாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நவீன் கூறுகிறார்.

உடனே விஜய், அப்படி என்றால் எதற்காக யமுனாவுக்கு நம்பிக்கை வரும் படி நீ பேசி பழகினாய். அது உன்னுடைய தவறுதான். அந்த தவறுக்கு நீ பிராயஜித்தம் செய்யும் விதமாக நீ யமுனா கழுத்தில் தாலி கட்டி தான் ஆக வேண்டும் என்று பிளாக் மெயில் பண்ணும் அளவிற்கு மிரட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு நொந்து போய் நவீன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் விஜய், காவேரி மற்றும் யமுனா இவர்களுடைய சுயநலத்திற்காக நவீன் பலியாடாக சிக்கி யமுனா கழுத்தில் தாலி கட்ட போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News