புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆடியோ லான்ச்சுக்கு பொருத்தமில்லாமல் வந்த விஜய்.. பரபரப்பை கிளப்பிய இசையமைப்பாளரின் தடாலடி பேச்சு

விஜய் நடிப்பில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. ஒட்டுமொத்த திரையுலகமே மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த அந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்யை பார்த்த பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. ஏனென்றால் விழாவின் நாயகனான அவர் ரொம்பவும் எளிமையாக வந்திருந்தார்.

எப்போதுமே விஜய் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ரொம்பவும் கிராண்டாக உடை அணிந்து தான் வருவார். ஆனால் இந்த முறை அவர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் கவரும் விதமாக வரவில்லை. ரொம்பவும் சிம்பிளாக பேண்ட், சர்ட் போட்டு வந்திருந்தார். இதை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

Also read: வம்சியின் மெத்தனத்தால் கடுப்பில் இருக்கும் விஜய்.. ஆசையில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

அதாவது விஜய்க்கு இப்போது அதிக பொறுப்பு வந்திருக்கிறது. மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒருவர் மேடையில் இவ்வளவு சாதாரணமாக காட்சியளிப்பது நெருடலாக இருக்கிறது. மேலும் அவர் தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

வாரிசு இசை வெளியீட்டின் போது அவர் தன்னுடைய தலை முடியை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியை சரி செய்து அந்த பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்ற மாதிரியான ஒரு உடையை அணிந்து வந்திருக்கலாம். இப்பொழுது விஜய் ரொம்பவும் சிம்பிளாக வந்திருப்பதை எளிமை என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எளிமை என்பது வேறு பொருத்தம் என்பது வேறு.

Also read: நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் தளபதி தான்.. சினிமா பிரபலத்தை ரவுண்டு கட்டிய ரஜினி ரசிகர்கள்

அந்த விழாவிற்கு ஏற்ற பொருத்தமான உடையை அவர் அணியவில்லை என்பது தான் என்னுடைய கருத்து என ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒரு வகையில் அவர் கூறுவதும் சரியாக தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த விஷயத்தை இதற்கு முன்பே ரசிகர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் ஓப்பன் ஆக கூறியிருந்தனர்.

மேலும் விஜய்யின் தலைமுடியையும் சிலர் கிண்டல் அடித்து பேசி இருந்தனர். அதிலும் அவர் ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுக்கும் புகைப்படத்தை வைத்து பல மீம்ஸ், ட்ரோல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே விஜய் தற்போது ட்ரீட்மென்ட்டுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் ஜேம்ஸ் வசந்தன் இவ்வளவு வெளிப்படையாக கூறியிருப்பது சில சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விஜய்க்கு பதிலடி கொடுத்த அஜித்தின் டயலாக்.. அட இதுல இவளோ விஷயம் இருக்கா?

Trending News