திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

Actor Ajith and Vijay: சினிமாவிற்குள் இருக்கும் சில சீனியர் நடிகர்கள் மீது மற்ற நடிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. எப்படி இவர்களை ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல் இவர் தான் என்னுடைய ரோல் மாடல் என்று சொல்லும் அளவிற்கு பல நடிகர்கள் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும், எனக்கு அவரை  ரொம்ப பிடிக்கும் எனவும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். உதாரணத்திற்கு சிம்புவிற்கு அஜித் என்றால் எந்த அளவிற்கு பிடிக்கும் என்று அவர் பல பேட்டிகளில் சொல்லி நாம் பார்த்திருக்கும்.

Also read: தகுதி இல்லாமல் படம் எடுக்க வந்த அஜித் பட இயக்குனர்.. இரட்டை வசூல் தந்த படம்

அப்படித்தான் இந்த நடிகரும் நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் சொன்னதிலிருந்து விஜய் படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கூட வரவே இல்லை. காரணம் இவர் சினிமாவிற்குள் நுழைந்ததே விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தில் அவருடைய தம்பியாக நடித்ததன் மூலம்.

ஆமாம் நடிகர் ஜெய் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இவருடைய சினிமா வாழ்க்கைக்கு விளக்கேற்றிய படம் என்றே சொல்லலாம். அப்படி இருக்கும் பொழுது எப்பொழுது பார்த்தாலும் அஜித்தை பற்றி பேசுவது, அஜித் தான் என்னுடைய தலைவர் என்று சொல்வது விஜய்க்கு கொஞ்சம் கடுப்பாகி இருந்திருக்கும் போல.

Also read: அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. பதறிப் போய் கூட்டணி போட வந்த முக்கிய கட்சிகள்

அதனாலே விஜய், அவருடைய அடுத்த எந்த படங்களிலும் இவருக்கு ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் தலைமுழுகி விட்டார். அத்துடன் அஜித் ரசிகர் என்றாலே அவர்களால் சொல்லும்படியாக பெரிய அளவில் வளர முடியாமல் தவிக்கிறார்கள் என்பது போல் நிலைமை ஆகிவிட்டது.

இதுக்கு தான் சில நடிகர்கள் எதுக்கு நமக்கு வம்பு என்று இருக்க இடம் தெரியாமல் வந்தோமா, நடித்தோமா என்று போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை தான் சொல்லுவாங்களோ பெரிய இடத்தை பகைத்துக் கொள்ள கூடாது என்று. கமுக்கமாக இருந்து செய்ய வேண்டிய விஷயங்களை வச்சு செய்து விடுவார்கள்.

Also read: கட்டுமஸ்தான நடிகரின் கண்ட்ரோலில் இருக்கும் விஜய் பட நடிகை.. டாப் ஹீரோவுக்கு வச்ச ஆப்பு

Trending News