சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டிஆர்பி-ஐ எகிற வைக்க ஏப்ரல் 14-ஐ டார்கெட் செய்யும் டாப் சேனல்கள்.. டிவி-யிலும் அஜித்துடன் மோதிப் பார்க்கும் விஜய்

முந்திய காலங்களில் ஏதாவது ஒரு பண்டிகை என்றால் திரையரங்குகளில் ஒரு படம் ரிலீஸ் ஆகும். அதை மக்கள் பொழுது போக்கிற்காக அந்தப் படங்களை பார்த்துவிட்டு மகிழ்வார்கள். ஆனால் இப்பொழுது ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து படங்களையும் மக்கள் திரையரங்குகளில் போய் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் அந்த அளவிற்கு எக்கச்சக்கமான படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. அதுக்காகவே தற்போது ஒரு விசேஷ நாட்களில் குடும்பத்துடன் வீட்டிலே இருந்து நேரத்தை செலவழிப்பதற்காக தொலைக்காட்சியிலே வெற்றிப்படமான படங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்து பார்ப்பது ஒரு பெரிய ரிலாக்ஸேசனை கொடுக்கிறது.

Also read: சின்னத்திரையின் TRPயை எகிற வைக்கும் 5 படங்கள்.. தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பும் ரஜினி படம்

அத்துடன் எல்லா சேனலுக்கும் இது பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கிறது என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு புது புது படங்களை ஒளிபரப்பாக இருக்கிறது. அதிலும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு முன்னிட்டு வருகிறது.

முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுமே பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. அவர்கள் இதைத் தவிர வேறு எந்த சேனலையும் எவ்வளவு பெரிய நிகழ்ச்சிகள், படங்கள் வெளி வந்தாலும் அதில் பார்ப்பதற்கு ஆர்வம் இல்லாமல் சன் டிவி தான் பார்ப்போம் என்று இருப்பவர்கள் கூட்டமும் இருக்கிறது. அவர்களை கவரும் வகையில் தான் பொங்கல் தினத்தன்று வெளிவந்த விஜய்யின் வாரிசு திரைப்படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

Also read: கேபிள் டிவிக்கு வரும் அநியாயங்கள்.. இனி தனி தனி டிவி சேனல்களுக்கு காசு கட்டனும்.. எவ்வளோ தெரியுமா?

இதை பார்க்கும் பொழுது அஜித்துடன் போட்டி போடுவதற்காகவே வாரிசு படத்தை போடுகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஏனென்றால் அஜித் படத்தை ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சி வெளியிடுவதற்கான உரிமையை வாங்கி விட்டது. அதனால் அவர்கள் கண்டிப்பாக ஒளிபரப்புவார்கள் என்று நினைத்து அவருக்கு போட்டியாக விஜய் படத்தை இறக்கி இருக்கிறார்கள்.

அடுத்ததாக விஜய் டிவியில் பிரின்ஸ் மற்றும் செம்பி திரைப்படம், கலைஞர் டிவி சர்தார் மற்றும் கட்டா குஸ்தி மற்றும் ஜீ தமிழில் பொம்மை நாயகி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் திரையரங்குகளில் பார்க்காத மக்கள் மற்றும் மறுபடியும் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து கண்டுகளிப்பதற்காக போடப்படுகிறது.

Also read: விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அடித்த லக்.. 2026 எலக்சனை குறி வைத்து தளபதி போடும் மாஸ்டர் பிளான்

Trending News