Vijay Condemnation the ruling party that CAA should not be accepted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலில் குதித்து தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி அறிவித்ததில் இருந்து அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். தனது கட்சியின் செயலியை அறிமுகப்படுத்தி சர்வரையே ஸ்தம்பிக்க செய்தார்.
இதுவரை கம்முனு, உம்முன்னு, ஜம்முன்னு இருந்த தளபதி முதன்முறையாக புதுச்சேரி மாணவி ஆர்த்தியின் சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அடுத்ததாக இந்தியா மற்றும் தமிழகத்தின் அரசியல் நகர்வுகளை உற்று நோக்கி அதற்கு எதிரான தன்னுடைய கருத்தை அழுத்தமாக முன்வைத்து வருகிறார்.
ஆளும் மத்திய அரசு கடந்த 2019 இல் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தும் விதமாக CAA எனப்படும் “Citizenship Amendment Act” சட்டத்தை கொண்டு வந்த போது பல மாநிலங்களிலும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக சாயம் பூசப்பட்டு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் ஆங்காங்கே கொந்தளித்தனர்.
Also read: நடிகர்களின் ஓட்டை கவர ஒரு கோடியை தூக்கி கொடுத்த விஜய்.. பக்கா அரசியல்வாதியாக மாறிய தளபதி
சமீபத்தில் சட்டத்திற்கான விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி முதன்முறையாக அரசுக்கு எதிரான நடவடிக்கையாக தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துள்ளார். மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடியின் ஆதரவால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்
சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று திமுக ஆட்சியை சீண்டி உள்ளார் விஜய்.
இதில் ஒரு பெரிய காமெடி என்னவென்றால், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பாஜக அரசு பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், இந்த சட்ட திருத்தம் முதலில் அறிவிக்கும் போதே எதிர்த்தவர்கள் திமுகவினர். “உறுதியாக இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் கால் வைக்க விடமாட்டோம்” என்று முதல்வரே உறுதிமொழியை அளித்த பின்பும், ஆளும் கட்சியை விஜய் தேவை இல்லாமல் வம்புக்கு இழுப்பதாக தெரிகிறது.
Also read: விஜய்யின் அரசியல் விளம்பரத்தை தடுத்த அஜித்.. இயற்கையாகவே இது நடந்து விட்டது..!