செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பட்டாகத்தியுடன் கேக் வெட்டிய விஜய்.. பிரபல பத்திரிக்கையால் கொந்தளித்த ரசிகர்கள்

சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. அஜித் நடித்த துணிவுடன் போட்டி போட்ட நிலையில் விஜயின் வாரிசு திரைப்படம் முழுவதும் தெலுங்கு சாயலில் இருப்பதால் வசூல் ரீதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கே தள்ளப்பட்டது.

இதனால் முதல் இரண்டு நாட்கள் சற்று மந்தமாக இருந்த நிலையில் வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களின் வரவேற்பிற்கு பிறகு ருத்ரதாண்டவம் ஆடி வசூலின் உச்சிக்கே சென்றது. தற்பொழுது அவற்றையெல்லாம் நிரூபிக்கும் விதமாக விஜயின் வாரிசு திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. 

Also Read: ஹைதராபாத்தில் வாரிசு படக் குழுவுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்.. வைரலாகும் சக்சஸ்மீட் புகைப்படங்கள் 

சமீபத்தில் வாரிசு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பட குழுவினர் ஹைதராபாத்தில் பார்ட்டி வைத்துக் கொண்டாடினர். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்யும் பங்குபெற்று கேக் வெட்டி கொண்டாடினார். வாரிசு பட வெற்றி கொண்டாட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டானது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் கேக் வெட்டும் புகைப்படங்கள் வெளியானது. இதனை ரசிகர் ஒருவர் போட்டோஷாப் மூலம் விஜய் பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவது போன்று மாற்றியமைத்துள்ளார். இந்தப் புகைப்படம் வைரல் ஆனதை அடுத்து பிரபல பத்திரிக்கையில் விஜய் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டியுள்ளார் என்பது போல் தகவல் வெளியானது. 

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மத்தியில் இதுதான் பேஷனாகி விட்டது என்பது போலவும் இது மாதிரியான செயல்கள் அவரது ரசிகர்களை தவறான பாதையில் அழைத்து செல்வது போல் உள்ளது என்று தவறான செய்திகளை பரப்பியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பிரபல பத்திரிக்கையானது தேவையில்லாமல் ரசிகர்களை வன்முறையில் தூண்டும் விதமாக செய்திகளை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறாக விஜய் கேக் வெட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் கையில் பட்டாகத்தி இல்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்நிலையில் இப்படி தவறான செய்தியை வெளியிட்டதற்கு கொந்தளித்த ரசிகர்கள் பிரபல பத்திரிக்கையானது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அலுவலகத்திற்க்கே செல்வோம் என பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாகத்தியுடன் கேக் வெட்டிய விஜய்?

vijay-cinemapettai
vijay-cinemapettai

Also Read: தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

Trending News