வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மிரர் செல்பியில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட விஜய்யின் மகள்.. அடுத்த வாரிசு நடிகை ரெடி!

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுவும் சமீப காலமாக வாரிசு படத்தில் இருந்து ஏகப்பட்ட காட்சிகள் வெளியாகி வருவதால் படக்குழுவினர் தற்போது அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் லோகேஷ் கனகராஜ் பலமுறை இதனை உறுதி செய்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Also read: விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு

தளபதி விஜய் பல படங்கள் நடித்து வந்தாலும் தன் குடும்பத்துடன் நேரத்தை அதிகமாக செலவிடுவார். இவரது மகள் தெறி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். மேலும் தனது மகன் ஜான்சன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா பள்ளி விழாக்களில் கலந்து கொள்வார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது விஜய்யின் மகள் திவ்யா சாஷா தனது பள்ளி தோழியுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய்யின் மகன் ஜான்சன் சஞ்சய் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

Also read: தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

vijay divya saasha
vijay divya saasha

விஜய்யின் மகள் எடுத்த மிரர் செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அடுத்த கதாநாயகியாக உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

Also read: விஜய் கலெக்ஷன் அள்ளிய முதல் 50, 100 கோடி படங்கள்.. வசூல் மன்னனாக கிடைத்த அங்கீகாரம்

Trending News