Kushi Twitter Review: கடந்த சில வாரங்களாகவே பயங்கரமாக ப்ரமோஷன் செய்யப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஷி இன்று வெளியாகி உள்ளது. சிவா நிர்வனா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியில் உருவாகி இருக்கும் இப்படம் பற்றிய தங்கள் விமர்சனத்தை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அதில் அனைவரும் கூறும் ஒரே விஷயம் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ஜோடி பொருத்தம் வேற லெவலில் இருக்கிறது என்பதுதான். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது.
Also read: முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்
அதனாலேயே இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை காண்பதற்கு அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காத வகையில் படம் முழுக்க முழுக்க அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வரும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

அதிலும் முக்கியமாக பின்னணி இசை, பாடல்கள், இடைவேளை காட்சி, இறுதி காட்சிக்கு முன்பு வரும் சீன் என அனைத்துமே நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை இயக்குனர் கொடுத்திருக்கும் விதமும் பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த திரைக்கதைக்கு உயிர் கொடுப்பது போல் விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் அட்டகாசமான நடிப்பும் நிஜமான ஒரு ஜோடியை பார்ப்பது போன்று ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறது. இதை தற்போது கூறிவரும் ஆடியன்ஸ் இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

அந்த அளவுக்கு குஷி தற்போது சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக விஜய் தேவரகொண்டாவின் லிகர் படுதோல்வி அடைந்தது. அதை ஈடு கட்டும் வகையில் வெளிவந்திருக்கும் குஷி வசூலிலும் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: ராஷ்மிகாவா, சமந்தாவா.? விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ரகசியம்