வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னதிது சினிமாவில் இருந்து ஆல்பத்துக்கு போயிட்டிங்க? கேள்வி கேட்டு கொள்ளும் ரசிகர்கள்

“அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. தற்போது என்னவென்றால் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார்.

இதில் எந்த தவறும் இல்லையென்றாலும், இதை வைத்து இவர் மார்க்கெட்டை எடை போட ஆரம்பித்துவிட்டார்கள் ஒரு சில தயாரிப்பாளர்களும் நெட்டிசன்களும். மேலும் இன்னும் ஒரு சிலர், “என்னப்பா.. இன்னும் கொஞ்ச நாள் ல தெலுங்கு சீரியல் ல உங்கள பாக்கலாமா” என்று மட்டமாக நக்கல் செய்து வருகின்றனர்.

இவர் தற்போது கவுதம் தின்னனுரி இயக்கத்தில் தனது 12வது படத்திலும் ஷியாம் சிங்கா ராய் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் தனது 14-வது படத்திலும் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க சாஹிபா என்கிற ஆல்பத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இதில், இவருடன் இணைந்து துல்கர் சல்மான், ஜஸ்லீன் ராயல் மற்றும் ராதிகா மதன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆல்பத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஆல்பம் வரும் 15-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தான் சமீபத்தில் உங்கள் நடிப்பில், எந்த படமும் ஓடவில்லை.. எந்த படமும் வெளியாகவும் இல்லை. சம்மந்தமே இல்லாமல் விடியோஸ் மட்டும் வெளியிட்டு வருகிறீர்கள். இப்போது என்னவென்றால், ஆல்பம் பாடலில் நடிக்கிறீர்கள். உங்கள் கேரியர் கோல் தான் என்ன என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது அதற்க்கு, விஜய் தேவரகொண்டா பதிலும் அளித்திருக்கிறார்.

முதலில் அவருக்கு இந்த ஆல்பத்தில் நடிக்க விருப்பமே இல்லையாம். அதன் பிறகு, பாடகி மற்றும் நடிகையான ஜஸ்லீன் ராயல் வற்புறுத்தலின் நடித்ததாகவும் கூறுகின்றார். அதுமட்டுமின்றி, இதற்க்கு முன், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து வெளியிட்ட ஹீரியே பாடல், ட்ரெண்டிங் ஆனது. பாடலுக்கு ரிப்பீட் வால்யூ இருந்தது.

தற்போது, இதை கேட்கும்போதும், ரிப்பீட் வால்யூ இருப்பதாக தோன்றியது. அதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுமூலமாக ரசிகர்கள் மனதில் தொடர்ந்து வாழ முடியும் என்று தோன்றியது என்றும் கூறியுள்ளார்.

Trending News