ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

படத்தை விட நிஜத்துல ஓவர் கெமிஸ்ட்ரி.. சமந்தாவிடம் அத்துமீறும் விஜய் தேவரகொண்டா

Vijay Devarakonda, Samantha: சமந்தா கோலிவுட் மற்றும் டோலிவுட் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் உடல்நிலை பிரச்சனை காரணமாக மிகப்பெரிய பிரேக் எடுத்தார். ஆனாலும் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இப்போது இணையத்தை பார்த்தாலே குஷி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த படத்தை முடித்தவுடன் வெளிநாட்டில் ஓய்வு எடுக்கலாம் என்று சமந்தா போய் விட்டாராம்.

Also Read : விவாகரத்துக்கு பின்னும் ரகசிய உறவில் சமந்தா, வைரல் புகைப்படம்.. வயிற்றெரிச்சலில் நெட்டிசன்கள்!

ஆனால் சமந்தா பிரமோஷன் செய்தால் தான் படம் வேற லெவலில் ஹிட் ஆகும் என விஜய் தேவரகொண்டா விடாப்பிடியாக சமந்தாவை வரவழைத்துள்ளார். குஷி படம் காதல் மற்றும் குடும்பம் ஆகியவை சம்பந்தப்பட்ட படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நெருக்கம் காட்டி வருகிறார்கள்.

இதை பார்த்த ரசிகர்கள் படத்தைக் காட்டிலும் நேரில் ஓவர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுவதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இப்போது சமந்தா தனிமையில் தான் இருந்து வருகிறார்.

Also Read : முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

மேலும் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கள் வெளியானது. இந்த சூழலில் இப்போது சமந்தாவுடன் விஜய் தேவர் கொண்டா ஓவர் நெருக்கம் காட்டுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் பிரமோஷனுகாக என்றாலும் இப்படியா செய்வது என ரசிகர்கள் முகம் சுளிக்கின்றனர்.

ஆனால் சமந்தாவை பற்றி நிறைய விஷயங்களை விஜய் தேவரகொண்டா பகிர்ந்து இருக்கிறார். சமந்தாவுக்கு இருக்கும் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் முகம் வீங்கிவிடும் என்றும், மிகுந்த அவதிப்பட்டார் எனவும் கூறியிருக்கிறார். கண்டிப்பாக குஷி படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் தெரிவித்து இருக்கிறார்.

Also Read : இரட்டை வேடத்தில் நடித்த 6 ஹீரோயின்கள்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த நயன், சமந்தா

Trending News