புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவர்கொண்டா.. வரப்போகும் புது வம்பு

விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இல் இருக்கிறார்கள் என்று சமீபகாலமாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் அவர்களும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர்.

ஆனால் இதைப்பற்றி இருவர் தரப்பிலும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. இருவரையும் ஒன்றாக ஹைதராபாத் ஹோட்டலில் கூட பத்திரிகையாளர்கள் போட்டோக்கள் எடுத்து இருந்தனர். ஆனால் அது ஒரு, நட்பின் சந்திப்பு என்று இருவரும் சொல்லிக் கொண்டு வந்தனர்.

இந்த சர்ச்சைககெல்லாம் முக்கிய காரணம் அவர்கள் படங்களில் ஜோடி போட்டதுதான் . கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இதில் கீதா கோவிந்தாம் படம் இவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரியை உண்டாக்கியது. அதிலிருந்தே இவர்களை பற்றி கிசுகிசுக்கள் பரவத்தொடங்கியது

அது போக, இந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் ஒன்றாக ஊர் சுற்றித் திரிந்தனர். அதனால் இருவருக்குள்ளும் காதல் உறவு இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா அமெரிக்கா சென்றிருந்தபோது கூட ராஷ்மிகா அங்கே சென்றதாக வதந்திகளை கிளப்பி விட்டனர்

ஒன்றாக படத்தில் நடிப்பதில் தான் இந்த சர்ச்சைகள் வருகிறது. அதனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இப்பொழுது விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் ராஷ்மிகாவிற்கு பதில் சமந்தாவை ஹீரோயினாக போட்டுவிட்டனர். சமந்தாவும், சமீபத்தில்தான் கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்று வந்தார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

எனவே இனிமேல் ராஷ்மிகா போய் சமந்தாவுடன் புது சர்ச்சையான வம்பு வந்தாலும், வரலாம் என விஜய் தேவர் கொண்டா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சமந்தாவும் ஏற்கனவே புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடி சர்ச்சையைக் கிளப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News