செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.? விஜய், தில்ராஜை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை, K.ராஜன்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மற்றும் தயாரிப்பாளர் கே ராஜன் இருவரும் பல சர்ச்சையான விஷயங்களை அடிக்கடி பேசி வருகிறார்கள். இதற்கு சினிமா வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தாலும் தொடர்ந்து அடுத்தவர்களை வம்பு இழுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி விஜய்யின் வாரிசு படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் முழுக்க முழுக்க சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்டதால் விஜய் ரசிகர்களுக்கே இப்படம் சற்று அதிருப்தியை கொடுத்துள்ளது.

Also Read : சமீபத்தில் 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்த 5 படங்கள்.. மூன்றே வாரத்தில் விஜய் செய்த சாதனை

ஆனாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசு படம் அமைந்துள்ளது. இப்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு படம் 302 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கு சினிமா பிரபலங்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் 300 கோடி, உலக மகா உருட்டு என்று பதிவிட்டுள்ளார். அதாவது ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்தை பற்றி மோசமாக விமர்சித்திருந்தார். ஒரு மெகா சீரியலை படமாக எடுத்து உள்ளார்கள் என்று விமர்சித்தார்.

Also Read : விசுவின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகும் எஸ் ஏ சி.. கொல காண்டில் விஜய்

இப்போது வாரிசு படத்தில் வசூலைக் கேட்டு தயாரிப்பாளர் உருட்டுவதாக கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கே ராஜனிடம் வாரிசு 300 கோடி வசூல் பத்தி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கே ராஜன் வேடிக்கையான பதிலை அளித்துள்ளார்.

அதாவது மெர்சல் படத்திற்கு 300 கோடி வசூல் என்ற சொன்னார்கள், ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டு ஆபீஸ் கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார் என கே ராஜன் கூறியுள்ளார். அதேபோல் விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு 300 கோடி வசூல் என்று சொல்கிறார் என பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

blue-sattai-maran

Also Read : பிகிலைத் தொடர்ந்து வசூலில் முத்திரை பதித்த வாரிசு.. யாரும் தொட்டுப் பார்க்க முடியாத சாதனையில் விஜய்

Trending News