Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Vijay: தயாரிப்பாளர்கள் சம்பாதித்த மொத்த சொத்தையும் கேட்கும் விஜய்.. தளபதி 69க்கு எதிர்பார்க்கும் சம்பளம்

Vijay: தயாரிப்பாளர்கள் சம்பாதித்த மொத்த சொத்தையும் கேட்கும் விஜய்.. தளபதி 69க்கு எதிர்பார்க்கும் சம்பளம்

விஜய்க்கு கட்சி நடத்த பணம் தேவைப்படுகிறது அதனால் கிடைத்தவரைக்கும் படங்களில் சம்பாதித்து விட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்தி விடுவோம் என மனக்கணக்கு போட்டு வருகிறார். இப்பொழுது அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் கடும் யோசனையில் தட்டி கழித்து […]

விஜய்க்கு கட்சி நடத்த பணம் தேவைப்படுகிறது அதனால் கிடைத்தவரைக்கும் படங்களில் சம்பாதித்து விட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்தி விடுவோம் என மனக்கணக்கு போட்டு வருகிறார். இப்பொழுது அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் கடும் யோசனையில் தட்டி கழித்து வருகின்றனர்.

தளபதி 69 எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக இப்பொழுது விஜய் கேட்கும் சம்பளம் தான் மொத்த கோடம்பாக்கத்தையும் அதிரசெய்துள்ளது. ஏற்கனவே விஜய் மனதில் ரஜினியை விட அதிகம் சம்பளம் வாங்க வேண்டும் என ஒரு எண்ணம் இருக்கிறது.

தளபதி 69க்கு எதிர்பார்க்கும் சம்பளம்

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் படம் ரிலீஸ் ஆகி, ஒரு பெரும் பிசினஸ் கொடுத்த பிறகு சம்பளத்தை உயர்த்தினால் பரவாயில்லை. ஆனால் இப்பொழுதேஅவ்வளவு கோடிகள் கேட்பது நியாயம் இல்லை என தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள்.

தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவது ட்ரிபிள் ஆர் ப்ரொடியூசர் டி வி வி ஞானையா இவர் ஏற்கனவே விஜய் கேட்ட 200 கோடிக்கு ஒத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது விஜய் 250 கோடிகள் வரை சம்பளம் வேண்டும் என கேட்கிறாராம். இதனால் ஞானையா அதிருப்தியில் இருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தை விஜய்க்கு தெரியாமல் டி வி வி ஞானையா பிசினஸ் பண்ணும் அளவிற்கு சென்றுவிட்டார். அதனால் விஜய் இவர் தயாரிப்பதை நிறுத்தும்படி கூறியிருந்தார் ஆனால் விஜய் கேட்கும் 250 கோடிக்கு தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.