திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்க்காக ஏங்கும் ஸ்ரீநிதி செட்டி.. ஆனா பீஸ்ட் படம் இப்ப வரைக்கும் பார்க்கல

கே.ஜி.எஃப் 2 படம் தான் தற்போது இந்தியாவில் முக்கிய பேச்சு. பெரிதும் கவனிக்கப்படாத கன்னட திரையுலகிலிருந்து வெளியான ஒரு படம் மொத்த இந்திய திரையுலகையே பேச வைத்துள்ளது. பான் இந்திய படங்களுக்கு இப்போது முன்னோடியாக கிட்டத்தட்ட ஆர்.ஆர்.ஆரின் ஹிந்தி வசூலை இந்த படத்தின் வசூல் கிட்டத்தட்ட மிஞ்சியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தற்போது இளைஞர்கள் பலருக்கும் பிடித்த நாயகியாக மாறியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. முதலில் வெளியான கே.ஜி.எஃப் 1 படம் தான் இவரின் முதல் படமாகும். இரண்டாவது படமான இதிலேயே இந்திய திரை ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார். மிஸ் கர்நாடகா, மிஸ் சூப்பராநேஷ்னல், மிஸ் திவா என பல பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

இவர் சமீபத்தில் தமிழ் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கை பயணம், வாங்கிய பட்டங்களை, கே.ஜி.எஃப் படம், நடிகர் யாஷ் என பல்வேறான விஷயங்களை குறித்து பேசியுள்ளார். இவரிடம் நெறியாளர் நடிகர் விஜய் பற்றி வினாவினார். பீஸ்ட் படத்தை நீங்கள் பார்த்தீர்களா? என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, நான் எப்போதும் விஜயின் படங்களை திரையரங்குகளுக்கு சென்று தான் பார்ப்பேன். அவரின் பிகில், மாஸ்டர் போன்ற படங்களை நான் திரையரங்குகளில் கண்டு ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் அவர்தான். ஆனால் தற்போது கே.ஜி.எஃப் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளதால், இன்னும் பீஸ்ட் படத்தை நான் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன் என கூறினார்.

கே.ஜி.எஃப் 2 படம் வெளியாவதற்கு முன்பே ஸ்ரீநிதி விக்ரம்-அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நாயகியாக ஒப்பந்தமானார். இதுவே தமிழில் இவரின் அறிமுக படமாகும். இந்த படத்திலிருந்து வெளியாகி இருந்த தும்பி துள்ளல் என்ற பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், விக்ரம்-ஸ்ரீநிதியின் ஜோடி கெமிஸ்ட்ரியும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

பீஸ்ட் படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது, அதற்கு அடுத்த நாளே கே.ஜி.எஃப் 2 படம் வெளியானது. பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, கே.ஜி.எஃப் 2 படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், தமிழகத்தை பொருத்த வரை விஜயின் படத்திற்கு கே.ஜி.எஃப் படத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Trending News