திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கட்டுமஸ்தான நடிகரின் கண்ட்ரோலில் இருக்கும் விஜய் பட நடிகை.. டாப் ஹீரோவுக்கு வச்ச ஆப்பு

Vijay Movie Actress: ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சைகளை கிளப்பி அலப்பறை கொடுத்து வருபவர் தான் இந்த நடிகை. விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் இவரின் போக்கு சமீப காலமாகவே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது. அப்படித்தான் தற்போது கட்டு மஸ்தான நடிகருடன் சேர்ந்து கொண்டு இவர் டாப் ஹீரோவுக்கு வச்ச ஆப்பு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் விஜய்யின் பீஸ்ட் படம் இவரை கோலிவுட்டில் அதிக பிரபலம் ஆக்கியது. ஆனாலும் இவருக்கான வாய்ப்புகள் தான் வரவில்லை. அதனால் இப்போது தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இவர் சமீப காலமாக நடித்து வரும் படங்கள் தோல்வியை தான் தழுவிக் கொண்டிருக்கிறது.

Also read: ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது.. விஜய் பட நடிகையை கழட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்

அதனாலேயே இவரை ராசி இல்லாத ஹீரோயின் என பலரும் ஒதுக்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இவருக்கு மகேஷ்பாபு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் இப்போது இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். ஏனென்றால் இப்படத்தில் பூஜா ஹெக்டே மட்டுமல்லாமல் இளம் நடிகையான ஸ்ரீ லீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தற்போது தெலுங்கில் மட்டுமே ஏழு படங்களை கைவசம் வைத்திருக்கும் இந்த நடிகை தான் இளசுகளின் கனவு கன்னியாக இருக்கிறார். இதுதான் பூஜா ஹெட்டேவை கடுப்பாக்கி இருக்கிறது. இதன் மூலம் தனக்கு முக்கியத்துவம் குறைந்து விடுமே என்ற பயமும் அவருக்கு இருந்துள்ளது. அந்த சமயத்தில் தான் இவர் தன் காதலரான சல்மான் கானிடம் இந்த விஷயத்தை கூறியிருக்கிறார்.

Also read: 80 லட்சத்தை இழந்த விஜய் பட நடிகை.. கூடவே இருந்து குழி பறித்த மேனேஜர்

சமீப காலமாகவே இவரின் கண்ட்ரோலில் பூஜா கிட்டே இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் அண்மையில் ஒரு படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இந்த சூழலில் சல்மான் கான் தான் இந்த படத்தில் இருந்து விலகுமாறு பூஜாவுக்கு அட்வைஸ் செய்தாராம். அதை தொடர்ந்து தற்போது மகேஷ் பாபுவுக்கு கல்தா கொடுத்திருக்கும் இவர் மும்பையை நோக்கி பறந்து விட்டார்.

ஏனென்றால் சல்மான் கான் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அம்மணி தான் ஹீரோயினாம். ஏற்கனவே இவர்கள் இருவரும் படு நெருக்கமாக பழகி வரும் நிலையில் இந்த ஒரு விஷயமும் வெளியில் கசிந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மகேஷ் பாபு, நடிகை சம்யுக்தாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 308 பெண்களை டேட்டிங் செய்த லியோ பட நடிகர்.. அந்தரங்க விஷயத்தில் செய்த தில்லுமுல்லு

Trending News