புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிப்புக்கு குட் பை சொன்ன விஜய் பட ஹீரோயின்.. நயன்தாரா இவங்கள பார்த்து கத்துக்கோங்க

Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என்ற கெத்துடன் வலம் வரும் நயன்தாரா இப்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாத நிலையில் இந்த வருடம் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் உட்பட அடுத்தடுத்த படங்கள் வெளிவர இருக்கிறது.

அந்த வகையில் திருமணத்திற்கு பிறகும் கூட இவர் பிசியான ஒரு நடிகையாக தான் இருக்கிறார். இப்படி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தன் தனிப்பட்ட வாழ்வுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார் என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை இவர் அறிவித்தார்.

Also read: விஜய்யை காக்க வைத்த நகைச்சுவை நடிகர்.. அலட்சியம், ஈகோவால் சரிந்த மார்க்கெட்

இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினாலும் தன் குழந்தைகளுடன் அவர் இருக்கும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் குழந்தைகளுடன் இருக்கும் நேரம் மிகவும் குறைவு தான். இப்படி இவர் சம்பாதிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்த காஜல் அகர்வால் எடுத்திருக்கும் முடிவு பாராட்ட வைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி அந்தஸ்தை பெற்றுள்ள இவர் சில வருடங்களுக்கு முன்பு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது.

Also read: பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த காஜல் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கும் போது கர்ப்பம் தரித்தார். அதன் காரணமாகவே நடிப்புக்கு முழு ஓய்வு கொடுத்துவிட்டு தன் பிரசவத்தில் அதிக கவனம் செலுத்தினார். தற்போது இவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் காஜல் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இது அவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினையாக இருக்கிறது.

அதாவது தன் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியாத காரணத்தால் அவர் இப்போது சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறாராம். அதன்படி இனிமேல் எந்த சினிமா வாய்ப்புகளையும் ஏற்கக்கூடாது என அவர் முடிவெடுத்துள்ளார். இந்த விஷயம் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் கணவன், குழந்தைக்காக சினிமாவை விட்டு விலகும் இவரை பார்த்து நயன்தாரா கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: எப்படியோ ஒரு வருடத்தை கழித்த விக்கி-நயன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்

Trending News