திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கடைசி படம் மரண அடியா இருக்கணும்.. தளபதி 69-க்காக எட்டு இயக்குனர்களை வடிகட்டும் விஜய்

Vijay – Thalapathy 69: விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே அவருடைய கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.

ஒரு பக்கம் அட்லி மறு பக்கம் ஏ ஆர் முருகதாஸ் என பல யூகங்கள் கிளம்பியது. அதற்கேற்றார் போல் இப்படத்தை இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் தற்போது கடும் போட்டியே நடந்து வருகிறதாம். அதில் கிட்டத்தட்ட எட்டு இயக்குனர்கள் விஜய்க்கு கதை சொல்லி இருக்கின்றனர்.

அது அனைத்தையும் பொறுமையாக கேட்ட விஜய் தற்போது ஒருவருக்கு நேரடியாக நோ என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது இந்த போட்டியில் நான்கு தெலுங்கு இயக்குனர்களும், மூன்று தமிழ் இயக்குனர்களும் இருக்கின்றனர்.

Also read: உதடு வலிக்க முத்தம், முட்டி தேய டான்ஸ் ஆடிட்டு நேரடியா CM.. விஜய்யை விளாசிய லியோ பிரபலம்

இவர்களின் கதைகள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இயக்குனரை விஜய் லாக் செய்து விடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதில் வெற்றிமாறன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே இந்த காம்போ எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அதில் விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் பெருமை வெற்றிமாறனுக்கு கிடைத்தால் சொல்லவே வேண்டாம். நிச்சயம் தளபதிக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி.

அதனாலேயே தற்போது ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது விடுதலை 2, வாடிவாசல், வட சென்னை 2 என அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் விஜய்க்காக தரமான ஒரு சம்பவத்தை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: குட் பை சொல்லும் விஜய், தத்தளிக்கும் விடாமுயற்சி.. கல்லா கட்ட திசை திரும்பும் தியேட்டர்கள்

Trending News