திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யுடன் முதல் முறையாக இணைய போகும் நடிகை.. அய்யய்யோ! அவங்களயே கழட்டி விட்டாங்களா

விஜய் பீஸ்ட் படத்தை முடித்த கையோடு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லியுடன் விஜய் 66 படத்தில் நடிக்கயுள்ளார். வம்சி தமிழில் கார்த்தியின் தோழா படத்தை இயக்கியுள்ளார். விஜய் 66 படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கயுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் காதல், குடும்ப உறவு ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்படயுள்ளது. விஜயின் பூவே உனக்காக படத்தின் சாயலில் இப்படம் இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது. இப்போது விஜய் 66 படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் ராஷ்மிகா, கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்தார். தற்போது ராஷ்மிகா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்திலேயே முதலில் படக்குழு ராஷ்மிகா மந்தனாவை அணுகியுள்ளனர். கால்ஷீட் பிரச்சனையால் ராஷ்மிகா பீஸ்ட் படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு பூஜா ஹெக்டே தேர்வானார். இந்திய அளவில் 4,5 மொழிகளில் நடித்து வந்ததால் ராஷ்மிகாவுக்கு என்று ஒரு கெத்து காட்டி வந்தார் ஆனால் சர்வமும் தற்போது அடங்கிவிட்டது.

இந்நிலையில் விஜய்யின் 66 வது படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending News