Vijay: விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த வகையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிற்கப் போகிறார். அதற்கான வேலைகள் ஒவ்வொன்றும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் கமிட்டாகி இருக்கும் படங்களில் நடித்து முடிப்பதற்கான படப்பிடிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட ரீதியாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களை எப்படி அமுல்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கூறி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்குடன் போராடி வருகிறார்.
அதிரடியாக முடிவெடுத்த விஜய்
இந்த சூழ்நிலையில் 22 வருடங்களுக்கு முன் தமிழன் படத்தில் கூறிய ஒரு விஷயத்தை நிறைவேற்றும் விதமாக களத்தில் இறங்கி இருக்கிறார். அதாவது நம் நாட்டில் உள்ள மக்களுக்கு ஆங்கிலம், அறிவியல், வரலாறு தெரிந்திருப்பதை விட ஒவ்வொருவருக்கும் அடிப்படை சட்டத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைத் தெரிய வைக்கும் முயற்சியில் தான் நான் ஈடுபட்டு இருக்கிறேன்.
அதற்கான வேலைகளை நான் பண்ணுவேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்க காவல் நிலையங்களை கணக்கிட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதாவது காவல் நிலையத்திற்கு செல்லும் பொது மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருக்கும் வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களுக்கு உதவும் வகையில் இருக்கப் போகிறது.
அன்று திரையில் கூறியதை இன்று நிறைவேற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் அதிரடியாக முடிவை எடுத்திருக்கிறார். இன்னும் இது போன்ற பல நல்ல திட்டங்களை பொதுமக்களுக்காக பண்ண வேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது பொதுக்கூட்டங்களை போட்டு மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்னும் இரண்டு வருடங்களில் விஜய் முக்கால்வாசி கிணற்றை தாண்டி அரசியலில் வெற்றியை பார்த்து விடுவார் என்பதற்கு ஆதாரமாக பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.