வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இதில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மிஷ்கின் என ஏகப்பட்ட வில்லன்களுடன் சீரியஸ் ஆன படத்தில் சிங்கம் போல் விஜய் சீறிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து இப்படியே அதிரடி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு புதுவிதமான நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்ததாக தளபதி 68ல் வெங்கட் பிரபுவுடன் ஜாலி பண்ணப் போகிறார். எப்போதுமே வெங்கட் பிரபுவின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

Also Read: லியோவில் தளபதி சிகரெட் பிடிக்கல.. இது என்னடா புது உருட்டா இருக்கு

இதில் இளைஞர்களின் பட்டாளம், அவர்களின் அட்டூழியம் என படமே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தை ஒரு சில மாதத்திற்குள் முடித்துவிட்டு, உதயநிதி போலவே அடுத்த இரண்டு வருடம் எந்த படத்திலும் நடிக்காமல் முழு நேர அரசியல்வாதியாக மாற விஜய் முடிவு எடுத்துள்ளார்.

வரும் 29ஆம் தேதி ரிலீசாக இருக்கும் மாமன்னன் படத்திற்கு பிறகு இரண்டு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன், அரசியல் பணிகளில் முழுவதுமாக ஈடுபட போகிறேன் என உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவரைப் போலவே விஜய்யும் தற்போது தளபதி 68 படத்தில் மெனக்கெட்டு நடிக்காமல் ரொம்பவே ஜாலியாக நடிக்க முடிவெடுள்ளார்.

Also Read: விஜய் மறந்து போன 4 நடிகர்கள்.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி வாங்கிய மொக்கை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கலந்து கொள்ளலாம் என நினைத்த விஜய், தற்போது அதை வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் அதைவிட 2024ல் நேரடியாக முதலமைச்சர் தேர்தலில் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து அதற்கு தற்போதையிலிருந்தே வேலையை ஆரம்பித்து விட்டார்.

அதனால் வெங்கட் பிரபு படத்தை ஜாலியாக முடித்துவிட்டு இரண்டு வருடம் இடைவெளி எடுத்து, முழு நேரமாக ஆட்சியில் ஈடுபட்டு மக்களிடம் முகத்தை காண்பித்துக் கொண்டே இருக்கப் போகிறாராம். இதனால் விஜய்யின் அரசியல் அசுர வேகமெடுத்து கொண்டிருப்பதால், அவருடைய ரசிகர்கள் பெரும் பரபரப்பில் இருக்கின்றனர். அதேசமயம் தற்போது களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு திட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்தது போல் தயாராக இருக்கிறார்கள்.

Also Read: ரஜினியை போல ஏமாற்றும் விஜய்.. அதிருப்தியை ஏற்படுத்தும் சம்பவம்

Trending News