வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 68ல் அந்த விஷயத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. டபுள் ஹேப்பி மூடில் வெங்கட் பிரபு

தளபதி விஜய் தன்னுடைய அறுபத்தி எட்டாவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும், குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விஜய் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். தளபதி 68ல் கூட இயக்குனர் அட்லியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தான் வெங்கட் பிரபுவின் படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார் விஜய். இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பாகவே ஓகே ஆகிவிட்டதாக வெங்கட் பிரபு தன்னுடைய சமீபத்திய சமூக வலைத்தள பதிவு ஒன்றில் சொல்லியிருந்தார்.

Also Read:அனிருத்தை ரிஜெக்ட் செய்த ஏஜிஎஸ்.. தளபதி 68இல் யுவன் வர காரணம்

அதேபோன்று விஜய்க்கு மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். இதற்கு காரணம் கத்தி திரைப்படத்திலிருந்து அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை விஜய்க்கு செட் ஆகிவிட்டது. அவருடைய ரசிகர்களும் இந்த காம்போவில் வரும் பாடல்களை கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே விஜய் அனிருத் தான் இனி தன்னுடைய படங்களுக்கு இசையமைப்பாளர் என்று செட் ஆகிவிட்டார்.

இருந்தாலும் தளபதி விஜய்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாமலேயே இருந்து வந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் விஜய்யை இயக்கிய இயக்குனர்களும் பெரும்பாலும் அனிருத்தை தான் இசையமைப்பாளராக நியமித்திருக்கிறார்கள். இதனாலேயே ஒரு புது காம்போ உருவாகாமலேயே இருந்து வந்தது.

Also Read: தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

இயக்குனர் வெங்கட் பிரபுவை பொறுத்தவரைக்கும் அவருடைய ஆஸ்தானை இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். தளபதி 68 படத்திற்கும் வெங்கட் பிரபு, விஜய் இடம் யுவன் சங்கர் ராஜாவை பரிந்துரைக்க, தானாகவே தேடி வந்த வாய்ப்பு என்பதால் தளபதியும் உடனே இதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இதனால் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் படத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இணைகிறார்.

விஜய் யுவன் சங்கர் ராஜா இசைக்கு சம்மதிக்காமல் போய்விடுவாரோ என்று பதட்டத்தில் இருந்த வெங்கட் பிரபு தற்போது செம ஹாப்பி மூடில் இருக்கிறாராம். அதேபோன்றுதான் விஜய் ரசிகர்களுக்கும். யுவன் மற்றும் விஜய் இணைய வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய கனவாக இருந்தது. தற்போது விஜய்யின் ஆசை மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களின் ஆசையும் வெங்கட் பிரபுவால் நிறைவேறி இருக்கிறது.

Also Read:முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

Trending News