ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கிய தளபதி.. படம் முடியும் வரை சரோஜா சாமானிக்காலோ தான்

தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை. முதல் கட்டமாக ஒரு பாட்டு எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட.பத்து நாட்கள் இந்த பாடல் காட்சி எடுக்கப்படுகிறது. அதன் பின் தான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு.

இந்த படத்தில் சினேகா, லைலா போன்ற சீனியர் நடிகைகளை நடிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி தான் வேண்டுமென முடிவெடுத்தது விஜய் தானாம். இந்த படம் எவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க முடியும் என்று கூட வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளாராம்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

வெங்கட் பிரபு நான்கு மாதங்கள் கேட்டதாக தெரிகிறது. இந்த படத்தில் விஜய்யின் குறுக்கீடு இல்லை என்றால் வெங்கட் பிரபுவிடம் ,மங்காத்தா போல் ஒரு செம என்டர்டைன்மென்ட் படத்தை எதிர்பார்க்கலாம். விஜய்  அதற்கு வழி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.வழக்கமாக விஜய் பாணியை கையில் எடுத்தால் மற்றும் ஒரு சுறா, புலி படம் தான்

ஷூட்டிங் நடைபெறும் இந்த நான்கு மாதங்கள் வெங்கட் பிரபுவிற்கு, தீ மேல் நடப்பது போல தான் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. விஜய் வழக்கத்திற்கு மாறாக பல கண்டிஷன்களை போட்டு வெங்கட் பிரபுவை திக்கு முக்காட வைக்கிறாராம். படத்தில் ரகசியம் காக்க வேண்டும் என்பது வரை ஓகே தான், ஆனால் விஜய் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளார்.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

அதாவது வெங்கட் பிரபு ஆறு மணிக்கு மேல் எடுக்கும் அவதாரங்களை எல்லாம் கொஞ்ச நாட்கள் ஒத்தி வைக்க சொல்லி இருக்கிறார். அது மட்டும் இன்றி இந்த சென்னை 600028 கூட்டத்தை கொஞ்ச நாட்கள் தூரம் வைத்துக் கொள்ளும்படி ஒரு அட்வைஸை போட்டு இருக்கிறார். இதுதான் வெங்கட் பிரபுவைபிரபுவை தூக்கி வாரி போட்டிருக்கிறது

கதையில்லாமல் கூட படம் எடுப்பார் வெங்கட் பிரபு ஆனால் தன் தம்பி மற்றும் நண்பர்கள் இல்லாமல் எப்படி எடுக்க போகிறார் என்பது தெரியவில்லை. எப்பொழுதுமே வெங்கட் பிரபு கிட்டத்தட்ட 15- 20 நண்பர்கள் என ஒரு ஜாலியான கூட்டணி நட்போடு தான் சுற்றி வருவார். இப்பொழுது தளபதி வைத்த ஆப்பால் சர்வமும் அடங்கிப் போய் கிடக்கிறார்.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

Trending News