சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சினிமாவை வாழ வைக்கும் தெய்வம் தளபதி .. 120 கோடி வாங்கிட்டு இது கூட செய்யலைன்னா எப்படி சாமி

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் நல்ல லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக தளபதி கிட்டதட்ட 120 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கயுள்ளார். இந்நிலையில் இப்படத்தை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் மிக விரைவில் வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான முதல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும் அங்கு இன்னும் பல காட்சிகள் எடுக்க படக்குழு திட்டமிட்டுயிருந்தது. இதனால் அங்கே மே 5 இருந்து 25 வரை 20 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது. மேலும் அடுத்தகட்டப் படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் எடுக்க தான் முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால் விஜய் சென்னையில் தான் அடுத்த கட்ட ஷூட்டிங் எடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது சினிமா துறைதான். அதில் நடிகர், நடிகைகளை தாண்டி நலிவுற்ற தொழிலாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் விதமாக விஜய் தனது சூட்டிங்கில் சென்னையிலேயே நடத்தும்படி படக்குழுவினரிடம் கூறியுள்ளார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு விடிவு காலமும் பிறக்கும்.

மேலும், மாஸ்டர் படத்திலேயே சென்னையில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அப்படத்தின் கதை படி சென்னை சரிவராது என வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். ஆனால் தளபதி 66 படத்தில் விஜய் அதை கட்டாயம் ஆகியுள்ளார். இதனால் சினிமாவை நம்பி பிழைக்கும் பல குடும்பங்களுக்கு கடவுளாய் மாறியுள்ளார் விஜய்.

Trending News