வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அனிருத்தையும், மேனேஜரையும் மெர்சல் ஆக்கிய விஜய்.. 5 பேருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த தளபதி

Actor Vijay: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பரிசை அளிக்க வேண்டும் என யோசித்து அவர்களுக்கு பிடித்ததை கிப்டாக கொடுப்பார். அப்படி விஜய்யிடம் காஸ்ட்லி கிப்ட் வாங்கிய 5 பிரபலங்களை பற்றி பார்ப்போம்

இயக்குனர் பேரரசு: சிவகாசி, திருப்பதி, பழனி என ஊர் பெயர்களை வைத்து படமாக்கி ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் பேரரசு விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதற்காகவே இயக்குனர் பேரரசுக்கு விஜய் மாருதி சுசுகி காரை கிப்டாக கொடுத்தார்.

பிகில் பட குழு: மைக்கேல் மற்றும் ராயப்பன் என தந்தை மகனாக இரட்டை வேடத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக இந்த படத்தில் வேலை செய்த 400 தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விஜய் கோல்ட் ரிங்-கை அன்பளிப்பாக கொடுத்தார்.

யோகி பாபு: யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்த விஜய் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு கிரிக்கெட் பேட்டை கிப்ட் ஆக அனுப்பி வைத்தார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த திறமையை பார்த்து தான் விஜய் அவருக்கு கிரிக்கெட் பேட்டை கிப்டாக கொடுத்தார்.

அனிருத்: தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அனிருத் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு முன்னணி இசையமைப்பாளராக கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் இவர், விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து அதில் இருக்கும் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனது. இதற்காகவே விஜய் அனிருத்திற்கு ஒரு பியானோ-வை கிப்டாக கொடுத்தார்

அக்‌ஷ்சத் தாஸ்: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் தளபதியின் மகனாக மாறன் என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் அக்‌ஷ்சத் தாஸ் நடித்திருந்தார். இவரை விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டது. இதனால் அவருடைய பிறந்தநாள் அன்று கிப்ட்டா ஒரு கேமரா வாங்கி கொடுத்தார்.

Trending News