திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முருகதாஸிடம் வாக்கு கொடுத்த பின் கைவிட்ட தளபதி.. அப்படி பேசியதால் சம்பாதித்த மொத்த வெறுப்பு

தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் விஜய்யின் வியாபார மார்க்கெட்டை வேறு லெவலில் கொண்டு போனவர் ஏஆர் முருகதாஸ். ஏனென்றால் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி அடுத்தடுத்த பல வெற்றிகள், அதன் பின்பும் சர்கார் என விஜய்க்கு பெரிய வெற்றிகள் கிடைத்தது.

ஆனால் பீஸ்ட் படத்திற்கு முன்பாக விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் இருவரின் காம்போவில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. முதலில் விஜய் முருகதாஸிடம் ஒன் லைன் ஸ்டோரி கேட்டுள்ளார். அதன் பின்பு முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய்க்கு அந்த படம் பிடிக்கவில்லை.

Also Read: இப்பதாங்க இவரு டம்மி.. யாராலயும் யோசிக்க முடியாத ஏ.ஆர்.முருகதாஸின் 5 ஹிட் படங்கள்

ஏற்கனவே விஜய், சுறா படத்தின் மூலம் ஆன்லைன் ஸ்டோரி கேட்டு இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் மூலம் படுதோல்வியை சந்தித்தார். அதனால் சுதாரித்துக் கொண்டு ஒன் லைன் ஸ்டோரியை வைத்து முடிவு செய்துவிடக்கூடாது. முழு கதையையும் கேட்டுதான் படத்தில் ஒப்பந்தமாக வேண்டும் என்பதை தளபதி புரிந்து கொண்டார்.

இதனால் ஏஆர் முருகதாஸ் உடன் சேர்ந்து படம் பண்ணுவதாக கொடுத்த வாக்கை கைவிட்டு அந்த படத்தை அப்படியே ட்ராப் செய்துவிட்டார். இருந்தாலும் முருகதாஸுக்கு இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதற்காக அவர் தன்னுடைய ஒரு வருட உழைப்பை கொட்டி இருக்கிறார். நீங்கள் இந்த படத்தை பண்ணினால் உங்கள் ரேஞ்ச் வேற லெவலில் செல்லும் என்று கூறி விடாப்பிடியாய் இருந்திருக்கிறார் முருகதாஸ்.

Also Read: ஏண்டா இந்த படத்தை விட்டோம் என கதறி அழுத 6 ஹீரோக்கள்.. ஆடுகளம் பேட்டைக்காரன் ரோலை மிஸ் செய்த வில்லன்

ஆனால் விஜய் எனக்கு பிடிக்கவில்லை என்று மொத்த வெறுப்பை காட்டி நிராகரித்துள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏஆர் முருகதாஸ் மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார். இப்போது ஏஆர் முருகதாஸ் தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படம் வருகிற 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. 11 வருடம் கழித்து தளபதி 67ல் விட்டதைப் பிடித்த நடிகை

Trending News