ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முரளி நடிக்க இருந்த 3 படத்தை தட்டி தூக்கிய விஜய்.. இந்த வாய்ப்பும் இல்லனா அட்ரஸ் தெரியாம போயிருப்பாரு!

Actor Vijay: இதெல்லாம் ஒரு மூஞ்சியா! என ஏகப்பட்ட உருவகேலிக்கு ஆளானவர் தான் நடிகர் விஜய். இவருடைய ஆரம்ப கால படங்களை எல்லாம் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான் இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின்பு முதல் முதலாக இயக்குனர் விக்ரமன் விஜய்யை வைத்து பூவே உனக்காக என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்த படத்தில் முதலில் முரளி தான் நடிக்க இருந்தது, அவரை வைத்து தான் படத்தின் கதையை விக்ரமன் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் முரளி நடிக்க முடியாமல் போனது.

Also Read: விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

அதன் பின் அந்த படத்தில் விஜய் நடிக்க வைக்க விக்ரமன் முடிவெடுத்து அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த படம் தான் விஜய்யின் சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் இப்போது தளபதி ஆள் அட்ரஸ் தெரியாமல் போய் இருப்பார்.

இந்த படம் மட்டுமல்ல மொத்தமாக முரளியின் மூன்று படங்களின் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்திருக்கிறது. விக்ரமனின் பூவே உனக்காக படத்தின் தொடர்ச்சியாக காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற பட வாய்ப்பு முரளியிடம் இருந்து விஜய்க்கு வந்திருக்கிறது.

Also Read: லியோவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் சம்பந்தமில்ல.. உண்மையை உரைக்கிற மாதிரி சொல்லிய தயாரிப்பாளர்

அதை தொடர்ந்து விஜய்க்கு வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்த சந்திரலேகா படமும், முதலில் முரளியிடம் சென்று அதன் பின்பு தான் தளபதிக்கு வந்திருக்கிறது. இவ்வாறு முரளி பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவரால் நடிக்க முடியாமல் போன படங்களை தளபதி தட்டி தூக்கி இருக்கிறார்.

இந்த மூன்று படங்களின் மூலம் தான் விஜய் ஒரு ஹீரோவாக ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தார். இந்த படங்களுக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு தரமான கதைகளை கொண்ட வாய்ப்பு கிடைத்து. இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஏஆர் ரகுமானால் லியோ ஆடியோ லாஞ்சுக்கு பறக்கும் கட்டளை.. மறைமுகமாக உதயநிதி கொடுக்கும் நெருக்கடி

Trending News