திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!

நடிகர் விஜய், இன்றைய கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவரை நம்பி கோடிக்கணக்கில் படம் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். டாப் ஹீரோக்களான கமல், ரஜினியை விட மார்க்கெட்டில் இப்போது இவர் முன்னணியில் இருக்கிறார்.

விஜய்யிடம் பலரும் ஆச்சரியமாக பார்க்கும் விஷயம் அவருடைய எளிமைதான். சினிமாவில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் இவர் ஆரம்ப காலங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார். ஆனால் சமீப காலமாக விஜய்யிடம் எதிர்பாராத ஒரு நடவடிக்கை என்றால் அது அவர் தனது அப்பா சந்திரசேகரை ஒதுக்குவதுதான்.

Also Read: வாரிசு 210 கோடி வசூலா? வடிகட்டின பொய்.. கொந்தளித்து விநியோஸ்தர் அளித்த பதிலடி

சந்திரசேகர், சோபா தம்பதியினருக்கு விஜய் ஒரே ஒரு மகன் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க அவர் பெற்றோர்கள் மேல் பாரா முகமாய் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கிய காரணம் சந்திரசேகரனின் தேவையில்லாத நடவடிக்கைகள் என்று கூட சொல்கின்றார்கள். இப்போது விஜய் ஆரம்ப காலங்களில் தன் தந்தையை வெறுத்ததற்கான காரணம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய்யின் அப்பா சந்திரசேகர் என்று இப்போது இருந்தாலும், அவர் 90களின் காலகட்டத்தில் புரட்சி இயக்குனராக இருந்தவர். அந்த சமயத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நான் சிகப்பு மனிதன் என்னும் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார்.

Also Read: வசூல் ரீதியான வெற்றி யாருக்கு.. வாரிசு vs துணிவு, உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்

ரஜினிக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனராக இவர் இருந்தாலும், பொதுவெளிகளில் ரஜினியை பார்த்தால் சந்திரசேகர் உடனே காலில் விழுந்து விடுவாராம். முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்க்கு தன் தந்தையின் செயல் சுத்தமாக பிடிக்காதாம். அதனால் தான் ஆரம்பத்தில் தந்தையை வெறுக்க ஆரம்பித்தாராம்.

ஆனால் உண்மையில் சந்திரசேகர் ரஜினியின் காலில் விழுவதற்கு காரணம், ஒரு காலத்தில் அவர் ரொம்பவும் கோபக்காரராக இருந்தாராம். அந்த குணத்தை அவரிடமிருந்து மாற்றியது ரஜினிகாந்த் தான். மேலும் கிறிஸ்தவ மதத்தவரான சந்திரசேகர் ரஜினியால் தான் இந்து மதத்திற்கு மாறினார். இதுதான் சந்திரசேகர் ரஜினியை மதிப்பதற்கு காரணமாம்.

Also Read: அடுத்தடுத்து தனுஷ், விஜய்யை லாக் செய்த மாறன் பேமிலி .. மாஸ்டர் பிளானில் வெளிவரும் படங்கள்

Trending News