வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு சொன்ன அரசியல் கதை, உடனே ஓகே சொன்ன TVK தலைவர்.. மிரட்டி விடப் போகும் சூர்யா பட இயக்குனர்

Thalapathy 69 Movie Update: நான்கு வருடங்களாக மெல்ல மெல்ல அரசியலில் கால் எடுத்து வைத்த தளபதி விஜய் இப்போது ‘தமிழக வெற்றிக் கழகம் (TVK) ‘ என்ற கட்சியையும் துவங்கி 2 கோடி தொண்டர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக செயல்படுகிறார். இதனால் அவர் இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக போகிறார். இந்த சூழலில் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு, தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பது தான் ஹார்ட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

ஆனால் விஜய், தளபதி 69 படத்திற்கான கதையை ஏற்கனவே கேட்டுவிட்டாராம், கதை கேட்டதுமே உடனே ஓகேவும் சொல்லிவிட்டாராம். அந்த படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியல் பற்றியதுதான். அதுதான் இப்போது விஜய்க்கும் தேவைப்படுகிறது என்பதால், உடனே அந்த படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டார். தளபதி 69 படத்தின் இயக்குனர் வெற்றிமாறனா? அல்லது கார்த்திக் சுப்புராஜா? என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜை பொறுத்தவரை அவர் ஒரு கமர்சியல் இயக்குனரை தவிர அவரால் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப அரசியல் படத்தை எடுக்க முடியாது. ஆனால் வெற்றிமாறன் இதுவரை எடுத்த ஆடுகளம், அசுரன், விடுதலை போன்ற படங்களை பார்த்தால், வாழைப் பழத்தில் ஊசியை இறக்குவது போல தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருப்பார்.

Also Read: அவமானப்படுத்தியும் இடி தாங்கியாக குரல் கொடுத்த மன்சூர்.. ஒரே பேட்டியில் விஜய்க்கு வைத்த கொட்டு

தளபதி 69 படத்தின் கதையைக் கேட்ட விஜய்

அதில் எல்லாம் சமகால அரசியல்வாதிகளை பற்றியும், அவர்கள் செய்யும் அட்ராசிட்டியையும் தோலுரித்து காட்டினார். அவருடைய படத்தில் விஜய் நடிக்க முன் வந்தால் மட்டும் போதும், மற்றதை எல்லாம் வெற்றிமாறனே பார்த்துக் கொள்வார். ஆனால் இதில் தான் சிக்கல் இருக்கிறது. விஜய் இதுவரை நடித்த படங்களில் சாக்கடையை மிதித்தோ, மண்ணில் புரண்டோ பெரிதாக எந்த கஷ்டமும் பட்டிருக்க மாட்டார்.

ஆனா வெற்றிமாறனின் படங்களில் அதை எல்லாம் செய்ய விஜய் தயாராக வேண்டும். அதற்காகத்தான் இப்போது தளபதி தன்னையே பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேசமயம் வெற்றிமாறனும் விடுதலை 2 படப்பிடிப்பில் செம பிஸியாக இருக்கிறார். அதை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் எடுத்த பிறகுதான் தளபதி 69 படத்தை கையில் எடுப்பார்.

நிச்சயம் தளபதி 69 படத்தின் மூலம் வெற்றிமாறன் அரசியல்வாதிகளை மிரட்டி விடப் போகிறார். வெற்றிமாறனும் விஜய்யும் இணைவது எண்ணெய்யும் தண்ணியும் சேர்வது போல தான். ஆனா அது சீக்கிரமே நிகழப்போகிறது என்று பிரபல பத்திரிகையாளர் கோடாங்கி சமீபத்திய பேட்டியில் சஸ்பென்ஸ் உடைத்துள்ளார்.

Also Read: விஜய்யின் தொடர்பை துண்டிக்கும் 4 நடிகர்கள்.. மேலிடத்தை பகைச்சிக்க விரும்பாமல் பம்மும் ஹீரோக்கள்

Trending News