திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பேன் இந்தியா ஹீரோவாக பேராசைப்படும் தளபதி.. எவ்வளவு அடி வாங்கினாலும் ஜெயித்தே தீருவேன்

விஜய் தற்போது தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் உள்ளார். அதுமட்டும்இன்றி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அவர் தான் முதல் இடத்தில் உள்ளார். இப்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 120 கோடி சம்பளம் விஜய் பெற்று வருகிறார். அது மட்டும் இன்றி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இருக்கையில் வெளிநாடுகளிலும் விஜய்க்கு ஓரளவு மவுசு இருந்து வருகிறது. அதனால் தான் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது.

Also Read : விஜய்யின் அரசியலுக்கு ஆலோசனை கூறிய நடிகர்.. உசிப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் வில்லன்

ஆனாலும் வாரிசு படம் முழுக்க முழுக்க தெலுங்கு வாடையில் இருந்ததால் தமிழ் ரசிகர்களை கவர தவறியது. இப்போது இரண்டாவது முறையாக விஜய்யை தேடி தெலுங்கு பட வாய்ப்பு வந்துள்ளது. அதாவது வீர சிம்மா ரெட்டி என்ற படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி விஜய்க்கு ஒரு கதை தயார் செய்துள்ளார்.

அந்த கதையில் விஜய்யும் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளாராம். ஏனென்றால் அந்த இயக்குனர் பாலகிருஷ்ணாவை எப்படி பயன்படுத்தி இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஆந்திராவிலும் விஜய் ரசிகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இவரின் இயக்கத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என தளபதி முடிவு எடுத்துள்ளார்.

Also Read : விஜய்காக வரிசை கட்டி நிற்கும் 6 இயக்குனர்கள்.. அட்லீக்கு கொடுத்த அல்வா!

இதன் மூலம் அனல் பறக்கும் விதையாக தெலுங்கில் காலடி எடுத்து வைக்கிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இது சற்று அதிப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் பேன் இந்திய ஸ்டாராக வேண்டும் என்றால் சில விஷயங்களை செய்ய தான் வேண்டி உள்ளது. அந்த வகையில் விஜய்க்கும் எல்லா மொழியிலும் ரசிகர்கள் வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதுமட்டும்இன்றி தெலுங்கு படங்களில் விஜய் நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் இப்போது பேன் இந்தியா படமாக இல்லாமல் பேன் இந்திய ஹீரோவாக விஜய் மாறுவதற்கு பேராசைப்படுகிறார். கோபிசந்த் மலினேனி படத்தில் நடித்தால் அது கண்டிப்பாக நிஜமாகும் இன்று ஆசையில் தளபதி இந்த முடிவு எடுத்துள்ளார்.

Also Read : பாலகிருஷ்ணாவாக மாறப்போகும் விஜய்.. பணத்தாலேயே அடிச்சு வாய்ப்பு வாங்கிய தயாரிப்பாளர்

Trending News