விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துணிவு திரைப்படத்துடன் இப்படம் மோத இருப்பது மிகப்பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல், இரண்டாம் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 67 பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் தற்போது பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
Also read: 47 நிமிடத்தில் ரஞ்சிதமே ரெக்கார்டை உடைத்த சில்லா சில்லா.. சபாஷ் சரியான போட்டி
விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு டீசர் அட்டகாசமாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோவும், வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் அவருடைய புது கெட்டப் தான் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.
சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய்

சமீபத்தில் விஜய் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மணிப்பூர் நீதிபதியின் வீட்டு திருமணம் நடைபெற்றது. அங்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய்யை பார்த்து அங்கிருந்த அனைவரும் உற்சாகமடைந்தனர். இதனால் அந்த இடமே சற்று நேரம் பரபரப்பாக இருந்தது.
Also read: 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்
மேலும் அந்த திருமணத்திற்கு விஜய் வெள்ளை நிற சட்டையில், கையில் காப்புடன் வந்திருந்தார். இந்த விஷயத்தை தான் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். ஏனென்றால் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் கையில் ஒரு காப்பு அணிந்திருப்பார். தற்போது அவர் மீண்டும் அதே போன்ற ஒரு காப்பை அணிந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இதன் மூலம் அவர் நான் தளபதி 67 படத்திற்கு ரெடியாகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் தற்போது வாரிசு திரைப்படத்தை விட இந்த திரைப்படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு எரிந்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றி கொடுத்த இந்த கூட்டணி இப்போது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி உள்ளது.
Also read: ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி