ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய் கூட கொஞ்சல்ஸ் மட்டும் தான்.. விரைவில் டும் டும் டும்-க்கு ரெடியான க்யூட் ஜோடி

Actor Vijay movie heroine: தளபதி விஜய் உடன் நடிக்க மாட்டோமா என்று பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் திரை உலகில் என்ட்ரி ஆன உடனே அந்த ஹீரோயின் காட்டில் அடை மழை பெய்தது. விஜய்யின் தீவிர ரசிகையான அவருக்கு, தளபதியுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று விஜய்யை ஓவரா தாஜா செய்தார்.

பார்க்கிற இடமெல்லாம் விஜய்யுடன் கொஞ்சம் தான், கிஸ்களை பறக்க விட்டார். அதோடு விஜய்க்கு திருஷ்டி சுத்தி போடுவது என ஓவராக அழிச்சாட்டியம் பண்ணினார். இப்போது மாலத்தீவில் அந்த நடிகை கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல நடிகை ராஷ்மிகா மந்தனா தான். இப்போது இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவில் இருக்கிறார்.

விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாகவும் தகவல் வெளியானது. ராஷ்மிகா மந்தனா விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்து தளபதி ரசிகர்களிடம் செம பேமஸ் ஆகிவிட்டார். கடந்த வருட பொங்கலுக்கு ரிலீசான வாரிசு படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும், நேஷனல் கிரஷ் நடிகையான ராஷ்மிகா விஜய்யின் தீவிரமான ரசிகை என்பது இந்த படத்தின் மூலம் உறுதியானது.

Also read: ஏழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் கூட இனி சேரவே முடியாத 5 இயக்குனர்கள்.. போஸ்டரே வெளியிட்டு பல்பு வாங்கிய கௌதம் மேனன்

திருமணத்திற்கு தயாரான விஜய் படத்தின் கதாநாயகி

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை அவர் ஒரு ரசிகையாகவே ரசித்தது, படத்தின் பூஜையில் தளபதிக்கு அவர் திருஷ்டி சுத்தி போட்டது என அனைத்துமே சமூக வலைத்தளங்களை ட்ரெண்டானது. அதோடு தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, ஹிந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த அனிமல் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த சமயத்தில் தன்னுடைய காதலனை ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொள்ளப் போவதால், ரசிகர்கள் பலரும் இந்த கியூட் ஜோடிக்கு சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Also read: விஜய்க்காக அடுத்த படம் பண்ண போகும் 5 டைரக்டர்ஸ்.. பிடிக்கவில்லை என்றாலும் விடாமல் துரத்தும் வேதாளம்!

Trending News