சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Vijay: விஜய்க்கு தெரிந்ததெல்லாம் அந்த ரெண்டு நடிகை தான்.. அதுக்கு லாயக்கு இல்லன்னு அசிங்கமா பேசிய பாண்டியன்

Vijay knows only those two actresses: பொது வாழ்க்கையில் இறங்கிவிட்டால் எல்லாத்தையும் சந்தித்து தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப விஜய் அரசியலில் இறங்கியதும் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேசி அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திரிகையாளர் பாண்டியன் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றி ரொம்பவே அசிங்கமாக பேசி இருக்கிறார்.

அதாவது விஜய்க்கு CM ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தகுதியும் இல்லை அறிவும் இல்லை வெறும் புஸ்ஸி ஆனந்தை வைத்து அரசியலில் ஜெயித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அவருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும் தேசத்தை பற்றி என்ன தெரியும். அவருக்கு தெரிந்ததெல்லாம் திரிஷா இல்லனா கீர்த்தி சுரேஷ் தான் என்று ரொம்பவே காட்டமாக பேசி இருக்கிறார்.

விஜய்யின் அரசியலை பற்றி அவதூறாக பேசிய பாண்டியன்

அரசியலைப் பற்றி நல்ல தெரிந்தவர்களே இங்கு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் விஜய்க்கோ அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. தொடர்ந்து அவரிடம் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டால் அதற்கு சரியான பதிலும் சொல்லத் தெரியாது. இது ஒன்னும் சினிமா கிடையாது ஹீரோவாக நடித்தால் பணத்தை பார்க்கலாம் வெற்றி கிடைத்துவிடும் என்று நினைக்கிறாரோ என்னமோ.

ஆனால் இதையெல்லாம் பற்றி விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நன்றாகவே தெரிந்ததால்தான் அரசியல் வேண்டாம் என்று சொல்லிய நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கருத்து வேறுபாடு போய்க்கொண்டிருக்கிறது என்றும் பத்திரிகையாளர் பாண்டியன் பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம் என்பதைவிட பக்குவம் நிறைந்த விவேகம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசியலில் வெற்றியை பார்க்க முடியும். இவர் அரசியல் கட்சியை அறிவித்த பிறகு இரண்டு வருடத்திற்கு ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார் என்றால் அதிலிருந்தே இவருடைய தமிழக வெற்றி கழகம் என்ன நிலைமையில் இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது என விஜய்யை பற்றி ரொம்ப அசிங்கமாக பேசி இருக்கிறார்.

அதாவது எந்த நடிகை கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்க தெரிந்தவருக்கு அரசியலில் நாம் தகுதி பெற்று இருக்கிறோமா என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார். நான் உறுதியாக சொல்கிறேன் அவருக்கு அரசியலில் வருவதற்கு லாய்க்கு இல்லை என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் பேட்டி கொடுத்து வருகிறார்.

இவர் ஒரு பக்கம் இதையெல்லாம் பற்றி பேசினாலும் இன்னொரு பக்கம் விஜய்யின் அரசியலுக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் எல்லாம் தெரிந்து அரசியலுக்குள் நுழைந்தவர்கள் எல்லாம் மக்களுக்கு அப்படி என்ன நல்லது செய்து விட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தாலே அவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று விஜய்க்கு சப்போர்ட்டாக பேசி வருகிறார்கள்.

Trending News