விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு வந்த புது சிக்கல்.. கடைசி படத்தையும் கந்தலாக்கிய ஐடி ரைட்

Vijay
Vijay

ஒரு பக்கம் அரசியல் களத்தில் சூடு பறக்க வேலை செய்து கொண்டு இருந்தாலும் ஜனநாயகன் படத்திற்கு கொடுத்த கால் சீட்டுகளையும் கரெக்டாக ஃபாலோ செய்து நடித்து வருகிறார் விஜய். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்பொழுது அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதற்கு தடை போட்டுள்ளனர்.

பரபரப்பாக பனையூரில் செட் அமைத்து நடைபெற்று வந்த பட டூட்டிங்கை FEFSI அமைப்பினர் தலையிட்டு நிறுத்தி உள்ளனர். இந்த படத்தை தயாரிப்பது பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம். இவர்கள் யாஸ் மற்றும் நயன்தாரா நடிக்கும் டாக்ஸிக் படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

பெரிய தயாரிப்பு நிறுவனமான இவர்களுக்கு இப்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் வேலை செய்த பணியாளர்களுக்கு சுமார் 22 நாட்கள் பேட்டா காசு கொடுக்கவில்லையாம். இதனால் FEFSI அமைப்பினர் தலையிட்டு இவ்வளவு நாட்கள் சம்பளம் கொடுக்காமல் இருக்கக்கூடாது என தற்காலிகமாக படத்தை நிறுத்திவிட்டனர்.

கே வி என் நிறுவனம் Prestige குழுமத்துடன் சேர்ந்து முன்பு பல தொழில்களை செய்து வந்தனர். ஆனால் இப்பொழுது அந்த நிறுவனத்திடம் இருந்து பிரிந்து விட்டனர். prestige நிறுவனத்தில் ஐடி ரைட் நடந்து உள்ளது. இதனால் கே வி என் நிறுவனமும் சில விசாரணைகளை சந்திக்க முற்பட்டுள்ளது. இந்த ஐடி ரைடால் இவர்கள் நிறுவனத்தின் அக்கவுண்டுகளையும் முடக்கி வைத்துள்ளனர்.

இதனால் விஜய் மிகவும் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. ஏற்கனவே தன்னுடைய கடைசி படமான இதை விரைவில் முடிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகிறார். மற்றொருபுறம் இது விஜய்க்கு அரசியல் ரீதியாக கொடுக்கும் டார்ச்சர் எனவும் கூறி வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner