திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அவர் பேச்சை கேட்டு அப்பாவை டீலில் விட்ட விஜய்.. சைலன்டாக வேலை பார்த்த மனைவி

விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் இருக்கும் பிரச்சனை அனைவருமே அறிந்த விஷயம் தான். அவர்களுடைய இந்த சண்டை சில பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலை மறை காயாக பேசி வந்த இவர்கள் இருவரும் இப்போது நேரடியாக பேசுவது கிடையாது. அந்த அளவுக்கு இவர்களின் பிரச்சனை முற்றி போய் இருக்கிறது.

அதாவது விஜய் தன் அப்பாவிடம் ரசிகர்களை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்றும், இனிமேல் தன்னுடைய விஷயங்களை தலையிடக்கூடாது என்றும் நேரடியாகவே கூறிவிட்டார். அங்குதான் பிரச்சனை மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. ஆனால் உண்மையில் அதுதான் இந்த பிரச்சனைக்கான மூல காரணம் கிடையாது.

Also read: விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

விஜய் எப்பொழுது பெரிய ஹீரோவாக மாறினாரோ அப்போதே இந்த பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. இப்போதைய தமிழ் சினிமாவை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக மாஸ் இருக்கிறது. சொல்லப்போனால் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகராகவும் இவர் இருக்கிறார். அதனால் தான் இவருடைய படங்களுக்கு கோடிக்கணக்கில் பிசினஸ் நடைபெறுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்யின் மாமனார் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இப்பொழுது முழு அதிகாரமும் அவருடைய வசம் சென்றுவிட்டது. மேலும் விஜய் அவருடைய மாமனாருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Also read: ரேஸில் எப்போதுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. 7 வருடத்திற்கு முன்பே ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய அஜித்

அந்த வகையில் அவர் தன் அப்பாவின் முக்கியமான பிரச்சனைகள், பண தேவை, கடன் பிரச்சினைகள் ஆகியவற்றை கண்டும் காணாமல் இருந்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய மொத்த வருமானத்தையும் இப்போது லண்டனில் தான் முதலீடு செய்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் சினிமாவில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டால் உடனே லண்டன் சென்று செட்டில் ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறாராம்.

இதையெல்லாம் கேட்க போக தான் அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே சில பல வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் விஜய் தன்னுடைய அப்பாவை ஒதுக்கி வைத்துவிட்டு மாமனார் பேச்சை கேட்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு பின்னணியில் இருப்பது அவருடைய மனைவி தான் என்ற ஒரு பகீர் தகவலும் கிளம்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யாமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்திருக்கிறார். இவ்வாறு விஜய் ஒட்டுமொத்தமாக தன் மனைவி வீட்டு பக்கம் சாய்ந்து விட்டதாக திரையுலகில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகாத அம்மா சென்டிமென்ட்.. மம்மி ஷோபாவை 20 தடவை பார்க்க வச்ச படம்

Trending News