Thalapathy Vijay: நடிகர் விஜயின் அரசியல் வரவு, தமிழக அரசியலில் சூடு பிடிக்க வைத்திருக்கிறது. மொத்த அரசியல் கட்சிகளும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் விஜய் அரசியலுக்கு வருவது எங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை என்று வெளியில் சொன்னாலும் ஒரு சில கட்சிகளுக்கு பதட்டம் ஏற்படத்தான் செய்திருக்கிறது.
அதிலும் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு திட்டமும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் செய்வது போல் இல்லை. அவருக்கு பின்னால் யாரோ பயங்கரமாக திட்டம் தீட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட சொல்கிறார்கள்.
தளபதி பயங்கரமா ஸ்கெட்ச் போடுறார் போலயே!
லட்சக்கணக்கான மக்கள் கூடிய முதல் மாநாட்டை பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்தது விஜயின் பெரிய வெற்றி தான். தனக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து பேசாமல் அரசியல் ரீதியாக ஆதாரத்துடன் எதிர்த்து பேசுங்கள் என விஜய் தன்னுடைய நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகளின் ஊழல் பட்டியலை ஆதாரப்பூர்வமாக திரட்டி அதை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். தற்போது ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய்.
அது மட்டும் இல்லாமல் அடுத்த வருடத்தில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவட்ட நிர்வாகிகள் மீட்டிங் முடிந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் நிற்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.