
Vijay: அவன் பொருளை எடுத்து அவனை செய்றது என்று சொல்வார்கள். அதைத்தான் விஜய்க்கு செய்ய இருக்கிறார் பிரபல வாரிசு ஒருவர்.
என்னுடைய கேரியரின் உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் பேசியிருந்தார்.
இவ்வளவு பெரிய ஹீரோ சினிமாவை விட்டு விலகி மக்களுக்கு சேவை செய்ய வருகிறார் என்ற பிம்பத்தை உடைக்கத்தான் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
விஜய்க்கு விழ இருக்கும் பெரிய அடி
விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்குகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இந்த படம் வெற்றி படமாகிவிட்டால் விஜய்யின் சினிமா பயணத்தில் ஒரு மணி மகுடம் ஆகிவிடும். தோல்வி அடைந்து விட்டால் சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் தான் அரசியலில் குதித்தார் என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
விஜய் உடன் மோதத்தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் தயாராகிக் கொண்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.
பராசக்தி படம் இல்லை என்றாலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு பெரிய ஹீரோவின் படத்தை ஜனநாயகன் படத்துடன் மோதவிடும் என்பது உறுதி. அரசியல் பின்புலத்தை வைத்து ஜனநாயகன் படத்திற்கு தியேட்டர்கூட கிடைக்க விடாமல் செய்வதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.