திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 69 – நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம், நானே பார்த்துக்குறேன்! விஜய் எடுத்து அதிரடி முடிவு

Thalapathy 69: தளபதி விஜய் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தற்போது தமிழ்நாட்டின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சினிமாவாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும் இப்போதைக்கு அவருடைய அடுத்த நகர்வுதான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு ஜெயித்த அத்தனை கட்சிக்கும் வாழ்த்துக்களை அள்ளித் தெளித்தார் தளபதி. கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிலையில், தேர்தலில் ஜெயித்ததற்கு எந்த வாழ்த்துமே சொல்லவில்லை.

சரி தளபதி விஜயின் அரசியல் திமுகவை எதிர்த்து தான் இருக்கும் என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தி விட்டார்கள். அடுத்து சினிமாவை பொறுத்த வரைக்கும் GOAT படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதைத் தாண்டி அதிக கவனம் பெற்று இருப்பது தளபதி 69 தான்.

இதற்கு காரணம் விஜய் தன்னுடைய சினிமா பயணத்தை இந்த படத்தோடு முடித்துக் கொள்வார் என்பதால் தான். தளபதி 69 படத்தை யார் அடுத்து இயக்க இருக்கிறார்கள் என்ற பேச்சு பெரிய அளவில் போய்க்கொண்டிருந்தது.

விஜய் எடுத்து அதிரடி முடிவு

தற்போது இது சம்பந்தமாக பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் தனஞ்செயன் தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார். விஜய் தன்னுடைய கடைசி படத்தை முழுக்க முழுக்க அரசியலுக்காக தான் எடுக்க இருக்கிறார்.

இதனால் இந்த படம் முழுக்க அரசியலை தைரியமாக பேச வேண்டும். இதற்கு கண்டிப்பாக எந்த ஒரு தயாரிப்பாளரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏதாவது ஒரு இடத்தில் இந்த வசனம் வேண்டாம், இந்த காட்சி வேண்டாம் என்ற எதிர்ப்புகள் வரும்.

சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் டாப் ஹீரோக்கள்

கமல் – ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
சூர்யா – 2D எண்டர்டெயின்மெண்ட்
தனுஷ் – ஒண்டர்பார் பிலிம்ஸ்
சிவகார்த்திகேயன் – எஸ்கே புரொடக்சன்ஸ்
விஷால் – விஷால் பிலிம் பேக்டரி

இதனால் தளபதி 69 படத்தை நடிகர் விஜய் தான் தயாரிக்க இருக்கிறார். விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தன்னுடைய படங்களை சொந்தமாக தயாரித்தார்.

அதன் மூலம் நிறைய அரசியல் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்தார். தற்போது அதே ரூட்டை தான் நடிகர் விஜய் கையில் எடுக்க இருக்கிறார். இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கூட சொல்லலாம்.

தன்னுடைய படத்தை தயாரித்து விட்டு அப்படியே அந்த ப்ரொடக்ஷன் நிறுவனத்தை மேனேஜர் ஜெகதீஷ் மேற்பார்வையில் விட்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆன பிறகு, விஜய் அவருடைய படங்களை தயாரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

தளபதி 69 பற்றிய சமீபத்திய அப்டேட்டுகள்

Trending News