வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 69 பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.. சூப்பர் கதையோடு விஜய்யை லாக் பண்ணிய இயக்குனர்

Thalapathy 69 Director: எல்லா கோட்டையும் அழி, நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன் என சூரி அவருடைய பிரபலமான காமெடியில் சொல்லி இருப்பார். அப்படித்தான் இப்போது தளபதி 69 படத்தின் அப்டேட் வந்திருக்கிறது. தளபதி 68 படம் முடிவடைவதற்குள்ளேயே, தளபதியை வைத்து 69 வது படத்தை இயக்கப் போவது யார் என அடுத்தடுத்து யூகங்கள், அதன் பின்னர் உறுதியான தகவல்கள் என சில செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து, கௌதம் மேனன், அட்லி, ஆர் ஜே பாலாஜி என லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தளபதி 69 படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அல்லது வெற்றிமாறன் என 90% இரண்டு சாய்ஸ்களாக முடிவானது.

இப்போது வெளியாகி இருக்கும் அப்டேட்டில், இந்த இரண்டு இயக்குனர்களுமே இல்லாத ஒருவர் பெயர் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தளபதி 68 படம் முடிவடைந்து ரிலீஸ் ஆவதற்குள் எதுக்கு இந்த அவசரம் என்று தோன்றலாம். இதற்கு காரணம் விஜய் தான். என் தரப்பில் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துக் கொடுத்த பிறகு, சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என அரசியல் கட்சி ஆரம்பித்த நாளில் சொல்லிவிட்டார்.

Also Read:இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு.. விஜய்யை இம்ப்ரஸ் செய்த 2 பேர், தளபதி 69 அப்டேட்

அதனால் தான் GOAT படத்தை தாண்டி தளபதி 69 கவனம் பெற்று இருக்கிறது. சமீபத்திய தகவலின் படி இயக்குனர் எச் வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்க இருக்கிறார். அவர் சொல்லிய கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனால் கண்டிப்பாக தன்னுடைய கடைசி படம் இப்படி ஒரு கதையாக தான் இருக்க வேண்டும் என விரும்பி, வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தளபதி.

எச் வினோத் ஏற்கனவே நடிகர் அஜித்குமாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி இருக்கிறார். இதில் கடைசியாக அவர் அஜித்துடன் இணைந்து வேலை செய்த துணிவு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கதை தனக்கு ரொம்ப பிடித்துப் போனதால் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்தும். வினோத்துடன் பணிபுரிய பிளான் பண்ணி இருக்கிறார் நடிகர் விஜய்.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தின் அப்டேட்டுகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், மறுபக்கம் வெங்கட் பிரபுவின் நிலைமைதான் ரொம்ப மோசம். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் அவர், எப்படியோ கஷ்டப்பட்டு விஜய் கால் சீட்டை வாங்கி பரபரப்பாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தால், விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு மொத்தமாக தன்னுடைய கடைசி படத்தின் மீது ஹைப்பை ஏற்றி வெங்கட் பிரபுவின் படத்தை கண்டு கொள்ள ஆளில்லாத அளவுக்கு பண்ணிவிட்டார்.

Also Read:கடைசி படம் மரண அடியா இருக்கணும்.. தளபதி 69-க்காக எட்டு இயக்குனர்களை வடிகட்டும் விஜய்

Trending News