புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லியோவை ஓரங்கட்டிய ஜெயிலர்.. எகிறிய பிசினஸால் தூக்கத்தை தொலைத்த விஜய்

Actor Vijay: தற்போது சோசியல் மீடியாவில் லியோ, ஜெயிலர் படங்களுக்கிடையே நடக்கும் போட்டி தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படமும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த இரண்டு படங்களும் தான் கோலிவுட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also read: இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி

அதில் ஜெயிலர் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ரஜினி பக்கம் தான் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே மீடியாக்களின் கவனத்தை கவரும் வகையில் வெளிவந்த முதல் மற்றும் இரண்டாம் பாடல் சமூக வலைத்தளங்களை திணறடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மறைமுகமாக பேசப்பட்டு வந்த விஷயமும் இப்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்ததால் விஜய்யும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதற்கேற்றார் போல் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து விட்டது. அதிலும் சூப்பர் ஸ்டார் சொன்ன குட்டி கதை பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Also read: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

இந்நிலையில் படத்தின் பிசினஸ் பற்றிய விஷயம் தான் விஜய்யின் தூக்கத்தை கெடுத்துள்ளது. அந்த வகையில் ஜெயிலர் 700 கோடி வரை பிசினஸாகும் என்று திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன. இதற்கான வேலைகளை எப்போதோ ஆரம்பித்த தயாரிப்பு தரப்பு இப்போது பாக்ஸ் ஆபிஸை மிரள விடும் வேலையும் செய்து வருகிறது.

இதெல்லாம் பார்த்து தான் லியோ டீம் இப்போது ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறதாம். அது மட்டுமின்றி விஜய்யும் 1000 கோடி வரை பிசினஸ் செய்ய வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டு இருக்கிறாராம். இப்படி இந்த இரண்டு படங்களுக்கு நடுவில் நடக்கும் போட்டியில் யார் பாக்ஸ் ஆபிஸை கைப்பற்ற போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: சன் டிவி வெளியிடும் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிற போகும் டிஆர்பி

Trending News