திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

234 தொகுதி, 6000 நபர்கள்.. கலைஞர் பிறந்த நாளில் பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் விஜய்

அண்மைக்காலமாகவே விஜய் குறித்து வெளிவரும் செய்திகள் தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் பல நிகழ்வுகள் அவருடைய அரசியல் வருகைக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளியவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் நடந்த இந்த நிகழ்வு தான் இப்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து தற்போது அவர் செய்ய இருக்கும் மற்றொரு விஷயமும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது வரும் ஜூன் 3ம் தேதி விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை தர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

Also read: விஜய்க்கு ஓகே சொன்ன கதையில ஹிட் கொடுத்த லியோ பட வில்லன்.. மொத்தத்தையும் போட்டுடைத்த இயக்குனர்

அது மட்டுமின்றி ஏழை பிள்ளைகள், தாய், தந்தை இழந்த குழந்தைகள் என அனைவருக்கும் பரிசுத்தொகை தர உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தது. இதற்காக விஜய் இரண்டு கோடி வரை பண ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுகளையும் பெற்றது. அந்த வகையில் தற்போது மாணவ மாணவிகள் உட்பட அவர்களின் பெற்றோர்கள் என 6000 நபர்களை விஜய் சந்திக்க இருக்கிறாராம்.

234 தொகுதிகளையும் கவர் செய்யும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்கள் வரும் 3ம் தேதி மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்தித்திக்க இருக்கின்றனர். அப்பொழுது பல முக்கிய விஷயங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான அன்று இந்த சந்திப்பை விஜய் நடத்துவதற்கு பின்னணி என்ன என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

Also read: ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் சினிமா அப்டேட்ஸ்.. பிறந்தநாளில் லியோ கொடுக்கும் ட்ரீட்

ஏனென்றால் வழக்கமாக இந்த தினத்தில் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கட்சித் தொண்டர்கள் பல நலத்திட்டங்களை செய்வார்கள். அன்று முழுவதுமே மீடியாவின் கவனம் இதை நோக்கித்தான் இருக்கும். அதை மனதில் வைத்து தான் விஜய் இப்படி ஒரு பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய் மாணவர்களை சந்திக்க இருக்கும் நிகழ்ச்சி தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மீடியாவின் ஒட்டுமொத்த கவனமும் இந்த பக்கம் திரும்பி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது ஜூன் 3ம் தேதி அன்று யாரும் எதிர்பார்க்காத பல ஆச்சரியம் சம்பவங்கள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: வில்லன்களே இல்லாமல் தளபதி மாஸ் காட்டிய 5 படங்கள்.. விஜய்யின் விண்டேஜ் வெற்றிகள்

Trending News