வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மக்கள் கடலில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. பறந்து வந்த TVK துண்டு, தளபதி செய்த செயல்

பல வாரங்களாக அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் இன்று வந்துவிட்டது. அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் விஜயின் முதல் மாநில மாநாடு இன்று ஆரம்பித்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாக மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி படையெடுத்து வந்துள்ளனர். நேற்றிலிருந்து பெரும் ஆரவாரமாக இருந்த அந்த இடம் இன்று தொண்டர்களால் நிறைந்துள்ளது.

இன்று காலையிலிருந்து ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் இதன் மீது தான் இருக்கிறது. நொடிக்கு நொடி ஒவ்வொரு விஷயமும் சோசியல் மீடியாவில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

இப்படி பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தற்போது மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். மக்கள் கடலில் ஆரவாரமாக வந்த அவர் அனைவருக்கும் கைசைத்தபடி வந்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களும் தொண்டர்களும் அவரை பார்த்த மகிழ்ச்சியில் கட்சி துண்டை அவரை நோக்கி பறக்க விட்டனர்.

மக்கள் கடலில் மாஸ் காட்டிய விஜய்

உடனே விஜய் அதை கையில் எடுத்து அழகாக கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டார். பார்க்கவே அவ்வளவு நிகழ்ச்சியாக இருந்தது. அதை தொடர்ந்து தொண்டர்களின் கரகோசத்துடன் அவர் மேடைக்கு வந்தார்.

அந்த சமயத்தில் தளபதியின் முகம் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தது. நிச்சயம் இப்படி ஒரு வரவேற்பையும் கூட்டத்தையும் யாரும் எதிர்பார்ப்பு இருக்க மாட்டார்கள். அந்த மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அந்த வகையில் இந்த மாநாடு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்தடுத்து தெரிய வரும். இதில் விஜயின் அரசியல் கொள்கை என்ன அவர் என்ன பேசப்போகிறார் என்பதையும் காண மீடியாக்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

Trending News