Vijay: தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்க்காத ஒரு விஜய், நேற்றைய அந்த மேடையில் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
என்னப்பா விஜய் இப்படி பேசுகிறார் என அத்தனை பேரும் மூக்கின் மேல் விரல் வைத்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய இலக்கு என்ன, அரசியலில் தனக்கு எதிரி யார் என்பதை நேரடியாகவே சொல்லிவிட்டார்.
விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொன்ன தளபதி
அது மட்டும் இல்லாமல் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சியாக இருந்தும் தமிழகத்தில் ஆளுநர் பதவியை நீக்குவோம் என சொன்னது எல்லாம் தமிழக அரசியலில் பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. இதுவரை தன் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய்.
எதுக்கெடுத்தாலும் என்ன கூத்தாடி என்று சொல்கிறார்கள். கூத்துனா என்ன சும்மாவா, அது நம் நாட்டின் பாரம்பரியம். எம்ஜிஆர் மற்றும் என் டி ஆர் அரசியலுக்கு வந்த போது கூட கூத்தாடி என்று தான் விமர்சனம் செய்தார்கள்.
அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது அதையே உதறி தள்ளிவிட்டு உங்கள் விஜயாக உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று சிங்கம் போல் கர்சித்து இருக்கிறார் தளபதி விஜய்.
அதுமட்டுமில்லாமல் திராவிட மாடல் ஆட்சி என சொல்லி ஏமாத்துறாங்க, அவங்க பாசிச என்றால் நீங்க என்ன பாயாசமா, குடும்ப அரசியலை ஒழிப்போம் என நேருக்கு நேராக ஆளும் கட்சி தான் தன்னுடைய இலக்கு என்பதை சொல்லி இருக்கிறார் தளபதி விஜய்.