ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

40 கதை அஸ்வின் போல் கதை பிடிக்காமல் பாதியில் எழுந்து விஜய்.. வேறு ஒரு ஹீரோ நடித்த மரண ஹிட்

தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தாலும் அவரது ரசிகர்களால் வசூலில் நல்ல லாபம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் எந்த இடத்திலும் விஜய் விட்டுக்கொடுக்காமல் அவரது ரசிகர்கள் நடந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விஜய் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தவறவிட்டுயுள்ளார். சமீபத்தில் மனோபாலா மற்றும் லிங்குசாமி இருவரும் ஒரு யூடியூப் சேனலில் கலந்துரையாடல் நடத்தினர். அதில் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். அப்போதுதான் லிங்குசாமி விஜயிடம் தனது கதையை கூறிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதாவது லிங்குசாமி கதை கூறும்போது முதல் பாதியை மட்டுமே கேட்ட விஜய் இந்தப் படம் வேண்டாம் எனத் தடுத்துவிட்டாராம். மேலும் லிங்குசாமி முழு கதையும் சொல்ல வேண்டும் என்ற உறுதியாக இருந்த போதும் விஜய் இப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லை வேறு ஒரு கதையுடன் வாருங்கள் என கூறிவிட்டாராம்.

அதாவது அந்த படத்தில் அப்பா கதாபாத்திரம் வலுவாக இருந்ததால் ஹீரோவுக்கு அவ்வளவாக ஸ்கோப் இருக்காது என்பதால் விஜய் இதை மறுத்து விட்டாராம். ஆனால் அதன்பிறகு விஷால் நடித்து உருவான அந்தப் படம்தான் சண்டக்கோழி. இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

மேலும் தேவி தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 225 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. மேலும் விஷாலின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் சண்டக்கோழி தான். இந்நிலையில் அதன்பிறகு ஒரு ஹோட்டலில் லிங்குசாமி விஜய்யை சந்தித்து உள்ளார்.

அப்போது லிங்குசாமி இந்த கதையை வேண்டான்னு சொல்லிட்டீங்களே சார் எனக் கேட்டுள்ளார். அதற்கு விஜய், படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்றும் விஷால் போன்ற ஒரு நல்ல நடிகர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியான தேர்வு என கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒருவர் வரணும்னு இருக்கு என புகழ்ந்துள்ளார்.

Trending News