வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாக ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் மாறாக குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடிக்கலாம் என்று யோசித்து முடிவெடுத்த படம் தான் வாரிசு.
இதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயமும், தயக்கமும் இருந்தது. இப்போது வாரிசு படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த சூழலில் வாரிசு படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. முதலில் தெலுங்கில் இந்த படம் வெளியாக மிகப்பெரிய பிரச்சனை பிடித்தது.
Also Read : வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்
கடைசியாக ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கில் வாரிசு படம் வெளியாகி உள்ளது. இந்த படங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபல நடிகர்களாக இருக்கும் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியானதால் விஜய்க்கு அந்த நாளில் திரையரங்குகள் கிடைக்காது என பலரும் கூறி வந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் தில் ராஜ் நன்றாக யோசித்து விஜய் படத்திற்கு ஆந்திராவில் கிட்டத்தட்ட 350 தியேட்டர்கள் வரை வாரிசு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறாராம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களின் படங்களுக்கு தலா 200 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.
Also Read : விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்
தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களின் படங்களுக்கே அங்கு கம்மியான தியேட்டர்கள் கொடுக்கப்பட்டு நிலையில் தில் ராஜுவால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் விஜய் நினைத்த மாதிரியே ஆந்திராவில் கால் பதித்துள்ளார்.
மேலும் அஜித்தின் துணிவு படத்திற்கு வெறும் 53 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம். ஏனென்றால் துணிவு படத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் தான் அவர்கள் ஆர்வம் செலுத்தி வந்தார்கள். ஆகையால் ஆந்திராவில் அவர்கள் முயற்சி செய்யாத காரணத்தினால் குறைந்த திரையரங்குகள் கிடைத்துள்ளது.
Also Read : ஆட்டநாயகனாக முன்னேறிய விஜய் எங்க தெரியுமா? துணிவு, வாரிசு 2 நாள் கலெக்சன் இதுதான்!