Vijay: இப்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அப்படி பல வருடங்களுக்கு முன்பு நாம் கொண்டாடிய படங்கள் இப்போதும் வரவேற்கப்படுவது ஆச்சரியம் தான்.
அப்படித்தான் விஜய்யின் கில்லி வெளியாகி தியேட்டர்களை கிடுகிடுக்க வைத்தது. இன்றைய தலைமுறை கூட அப்படி போடு போடு என அந்த படத்தை வைப் செய்தனர்.
கலெக்ஷனும் அமோகமாக இருந்தது. அதை அடுத்து தற்போது மீண்டும் விஜய் படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.
கில்லி அளவுக்கு மாஸ் காட்டுமா.?
அதன்படி கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சச்சின் இந்த வருட கோடை கொண்டாட்டமாக வெளிவர உள்ளது. விஜய், ஜெனிலியா க்யூட் கெமிஸ்ட்ரியில் வெளிவந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது படம் வந்து 20 வருடங்கள் ஆகும் நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுதான் இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஆக இந்த சம்மருக்கு அஜித்தின் குட் பேட் அக்லி வருவதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சச்சின் ரீ ரிலீஸ் ஆவதையும் தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
கில்லி அளவுக்கு இப்படமும் மாஸ் காட்டுமா கலெக்ஷனை தட்டி தூக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.