வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

தற்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் ரிலீஸ் தான் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத இருப்பது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய், அஜித்தின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

Also read: வெளிநாட்டில் துணிவு படத்திற்கு தடை ஏன் தெரியுமா.? விஜய்க்கு இருக்கும் மாஸ் தான் காரணமா?

அதிலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார் என்று வெளியான செய்தி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்தானம் காமெடி அவதாரம் எடுத்திருப்பதும் பெரும் ஆச்சரியத்தை கிளப்பியது. சமீபகாலமாக ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வந்த சந்தானம் இப்போது மனசு மாறி பழைய ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

அந்த வகையில் இந்த கூட்டணி வேற லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதை அதிகரிக்கச் செய்யும் வகையில் மற்றொரு பிரபலமும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அதாவது கைதி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்த நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also read: ரஜினி, அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. பெரிய சம்பவத்துக்கு அடிபோடும் மக்கள் செல்வன்

தற்போது அவரை தான் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்தில் கமிட் செய்திருக்கிறார் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே அரவிந்த்சாமி வில்லனாக கமிட் ஆகி இருக்கும் நிலையில் இவருடைய கேரக்டர் என்ன என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே 62 தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. மேலும் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் மிரட்டலான நடிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஏகே 62 படத்தையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக களத்தில் குதிக்க தயாராகி இருக்கிறார்.

Also read: துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்

Trending News