மொழி வேறுபாடுகள் இன்றி தற்போது மற்ற மொழி படங்களும் வெவ்வேறு மொழிகளில் வெற்றி அடைந்து வருகின்றன. பிரேமம், பாகுபலி போன்ற மலையாள, தெலுங்கு மொழி படங்கள் தமிழில் மிக பெரிய வெற்றியினை பெற்றது இதற்கு சிறந்த உதாரணம். ஆகையால் நடிகர்கள் தங்கள் மொழிகளை போல் மற்ற மொழி ரசிகர்களிடமும் வெற்றியடை முயற்சி செய்து வருகின்றன.
தமிழகத்தில் உச்ச நட்சத்திரமாக நடிகர் தளபதி விஜய் திகழுந்து வருகிறார். நடிகர் ரஜினியை காட்டிலும் தற்போது விஜயின் படங்கள் தான் பெரிய விலைக்கு விற்கப்படுகிறது. வசூலிலும் ரஜினியை மிஞ்சி விஜய் தற்போது வேறொரு தளத்தில் உள்ளார். தமிழகம் போலவே கேரளாவிலும் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
இவர் படங்கள் வெளியாகும் பொழுது மலையாள நடிகர்கள் தங்களது படங்களை தள்ளி வைக்கும் அளவிற்கு அங்கும் உயர்ந்து நிற்கின்றார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது விஜய் டோலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார். தமிழை போலவே பெரிய வணிகமுடைய தெலுங்கு படங்கள் இந்தியா அளவில் பெரும் வெற்றியினை பெற்று வருகின்றன. அந்த மார்க்கெட்டில் காலூன்ற முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறார் விஜய்.
தன்னுடைய அடுத்த படமான தளபதி 66ஐ ஒரு நேரடி தெலுங்கு படமாக மாற்றியுள்ளார். தெலுங்கின் முன்னணி தயரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க வம்ஷி படிப்பல்லி என்னும் தெலுங்கு இயக்குனரே இயக்குகிறார். தமிழில் வெளியான கார்த்தியின் தோழா படத்தை இயக்கியுள்ள இவர் நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனராவார்.
ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அண்மையில் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. அப்பொழுது வெளியான செய்திகள் தான் தற்போது தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் படத்தில் நடிகர் சரத்குமாரை தவிர மற்ற அனைவரும் தெலுங்கு நட்சத்திரங்களே. பிரபல தெலுங்கு காமெடியன் பிரமானந்தம் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் வில்லனாகவும் ஒரு தெலுங்கு நடிகரே ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தில் பெரும்பாலும் தெலுங்கு நட்சத்திரங்களே உள்ளதால் படம் தமிழகத்தில் எந்த அளவிற்கு எடுபடும் என்பது தெரியவில்லை.மேலும் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் நம்பமுடியாத சண்டை காட்சிகள் இடம் பெரும். அது தமிழ் ரசிகனுக்கு பிடிக்காது. இதனால் படம் வெற்றி அடையுமா என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். தெலுங்கு மார்க்கெட்டிற்காக தமிழில் விஜய் நீண்ட வருடங்களுக்கு பின் தோல்வி அடைந்து விடுவாரோ? என அவர் ரசிகர்கள் பயத்தில் உள்ளனர்.